ஏன் மா உனக்கு எல்லாம் ரசனையே இல்லையா? கணவன் முன்பே சங்கீதாவை திட்டிய விஜய்!

Author:
21 August 2024, 6:36 pm

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக 2000 காலகட்டத்தின் இடைப்பகுதியில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சங்கீதா. இவரது நடிப்பில் வெளிவந்த பிதாமகன் திரைப்படம் இன்றளவு மிகவும் ஃபேவரட்டான பலரது திரைப்படமாக பார்க்கப்பட்டு வருகிறது. பிதாமகன் திரைப்படத்தில் நடிகை சங்கீதா விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

sangeetha krish

இந்த திரைப்படத்தில் அவர்களின் நடிப்பு மிகப்பெரிய அளவில் அப்போதே பேசப்பட்டது. தொடர்ந்து உயிர், தனம் போன்ற திரைப்படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் சங்கீதா. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பாடகர் கிரிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

sangeetha - updatenews360 3

இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு கிடைக்கும் சில திரைப்பட வாய்ப்புகளில் நடித்துக் கொண்டே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் நடிகை சங்கீதா சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசியபோது… நான் பாடகர் கிரிஷ்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமயம் அது.

அப்போது ஒருமுறை நாங்கள் இருவரும் தளபதி விஜய்யை சந்தித்தோம். அப்போது என் கணவர் கிரிஷிடம்.. என்னடா வீட்ல எந்த நேரமும் பாடிகிட்டே தான் இருப்ப போல? என ரொம்ப ஜாலியா ஜென்ரலா கேட்டாரு. அதற்கு உடனே க்ரிஷ் ஐயோ அண்ணே நீங்க வேற… என்ன சங்கீதா வீட்ல பாடவே விட மாட்டாங்க என்று சொன்னார். உடனே விஜய் என்னை பார்த்து முறைத்து… ஏம்மா உனக்கு எல்லாம் ரசனையே இல்லையாமா? ஏன் இப்படி இருக்கீங்க? அவன் எவ்வளவு நல்லா பாடுவான் தெரியுமா? என்று சிரித்துக் கொண்டே சொன்னதாக சங்கீதா பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!