தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அப்படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்திற்கு “The Greatest Of All Time (G.O.A.T)” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் இப்படத்தை தயாரிக்கிறது.
பல வருடங்களுக்கு பிறகு தளபதி 68 படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள். இந்நிலையில், டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கும் இப்படத்தில் De-aging தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. GOAT படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இப்பட பணிகள் முடிந்த பிறகு தனது 69 ஆவது படத்தில் நடிக்க உள்ள தளபதி விஜய் அந்த படத்தோடு தனது சினிமா வாழ்க்கைக்கு ஓய்வு கொடுத்து விட்டு முழு நேர அரசியல் களம் இறங்க உள்ளது அனைவரும் அறிந்த விஷயமே. இந்நிலையில், விஜயின் 68 மற்றும் 69 ஆவது ஆக இரு திரைப்படங்களும் தமிழ் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்பட பணிகள் ஏறத்தாழ 60% முடிவுற்ற நிலையில், தற்போது, கோட் படக்குழு அமெரிக்காவில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.
விரைவில், இப்பட பணிகள் முடிவடைந்து தளபதி விஜயின் கோட் திரைப்பட இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, லியோ திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா முதலில் மலேசியாவில் நடத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில், அதன் பிறகு சென்னையில் நடத்த திட்டமிட்டு இறுதி நேரத்தில் அதற்கு உரிய அனுமதி கிடைக்காத காரணத்தால் இசை வெளியீட்டு விழா நடக்கவில்லை. இருப்பினும் திரைப்பட இசை வெளியீட்டு விழா முன்கூட்டியே நல்ல திட்டமிடலோடு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியா அல்லது சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளில் ஒரு இடத்தில் இந்த இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் விஜய் அடுத்ததாக கூற இருக்கும் குட்டி ஸ்டோரியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.