நாங்க என்ன சொம்பையா? GOAT படத்துல அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்திய வெங்கட் பிரபு!

Author:
5 September 2024, 1:18 pm

இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு தீவிரமான அஜித் ரசிகர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். தான் எப்படி அஜித்தை பார்க்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறாரோ அப்படியெல்லாம் அவரை மங்காத்தா படத்தில் காட்சிப்படுத்தியிருந்தார் வெங்கட் பிரபு.

Venkat Prabhu - Updatenews360

அந்த திரைப்படம் வெங்கட் பிரபுவுக்கு மட்டுமே இல்லாமல் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களையும் கொண்டாட வைத்தது. அஜித்தின் 50-வது திரைப்படமாக வெளிவந்த மங்காத்தா திரைப்படத்தில் வேற லெவல் மேனரிசம் செய்திருப்பார் வெங்கட் பிரபு.

இந்த நிலையில் அஜித்தின் தீவிரமான ரசிகர் வெங்கட் பிரபு என்பதால் அதே சாயலிலே அவருடைய திரைப்படங்களை எடுத்து வருகிறார். அப்படித்தான் விஜய்யை வைத்து தற்போது அவர் இயக்கியுள்ள கோட் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

venkat prabhu

இந்த கோட் திரைப்படத்திலும் அஜித்தின் மேனரிஸம், அஜித்தின் ஸ்டைல், அஜித்தின் டயலாக் உள்ளிட்டவை பெரும்பாலானவை இடம் பெற்றிருப்பதாக விஜய்யின் ரசிகர்கள் கூறி அப்செட் ஆகியிருக்கிறார்கள். இந்த படத்தை பார்த்த ஒரு சிலர் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

கதைக்குத் தேவையில்லாத காட்சிகள் எல்லாம் படத்தில் அதிகம் இருக்கிறது. படம் முழுக்க சண்டை காட்சிகள் தான் இருக்கிறது. அது படத்திற்கு தேவையானதாகவும் அமையவில்லை. படக்குழுவிவினர் கொடுத்த ஹைப் அளவிற்கு படம் அமையவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை என கூறி வருகிறார்கள்.

அதேபோல் மற்றொரு ரசிகர் கூறும் போது அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்த பல காட்சிகள் இந்த கோட் படத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. அதெல்லாம் படத்திற்கு தேவையில்லாத காட்சிகள் தான். படம் முழுக்க அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுப்பதற்கு விஜய்யை வைத்து ஏன் அவர் படம் எடுக்க வேண்டும்? இதனால் விஜய் ரசிகர்கள் கடுமையாக அதிர்ச்சையாகி விட்டனர் என கூறியுள்ளார்.

ajith

எனவே கோட் திரைப்படம் முழுக்க முழுக்க மற்ற ரசிகர்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சி திருப்தி தரும்படியாக இருக்கலாம். ஆனால், விஜய் ரசிகர்களுக்கு அதிருப்தியை தான் ஏற்படுத்தி இருக்கிறது. விஜய்க்கு இருக்கும் மாஸ்க்கு ஏற்ற காட்சிகள் இந்த திரைப்படத்தில் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

  • Vidamuyarchi total earnings worldwide போராடும் ‘விடாமுயற்சி’…இறுதி கட்டத்தை நோக்கி படத்தின் வசூல்.!
  • Close menu