தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
Author: Prasad4 April 2025, 7:20 pm
சச்சின் ரீரிலீஸ்…
விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக அமைந்தது. முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து உருவான இத்திரைப்படம் விஜய்யின் கெரியரில் ஒரு ஃபீல் குட் திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில் இத்திரைப்படம் வருகிற 18 ஆம் தேதி மறுவெளியீடு காண்கிறது.

“ஜனநாயகன்” திரைப்படமே விஜய்யின் கடைசித் திரைப்படம் என்பதால் இனி விஜய்யின் பழைய திரைப்படங்களை மறுவெளியீடு செய்தால்தான் திரையரங்கில் விஜய்யை பார்க்க முடியும் என்ற நிலை ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் “சச்சின்” திரைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் மிகவும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.
தளபதி VS தளபதி…

இந்த நிலையில் ஏப்ரல் 18 ஆம் தேதி “சச்சின்” திரைப்படம் உலகம் முழுவதும் மறுவெளியீடு காணவுள்ள நிலையில் ரஜினிகாந்தின் “தளபதி” திரைப்படமும் ஏப்ரல் 18 ஆம் தேதி மறுவெளியீடு காணவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே “தளபதி” திரைப்படம் தமிழகத்தில் மறுவெளியீடு கண்ட நிலையில், இந்த முறை உலகம் முழுவதும் “தளபதி” திரைப்படம் மறுவெளியீடு காண உள்ளதாம். இவ்வாறு தளபதி விஜய் திரைப்படமும் தளபதி திரைப்படமும் ஒரே நாளில் மோதவுள்ளதாக கூறப்படுகிறது.