படத்தில் மட்டும் இல்ல வீட்டுலயும் அப்படித்தான்.. செல்லப் பிராணியுடன் கொஞ்சி விளையாடும் விஜய்..!
Author: Vignesh18 November 2023, 5:04 pm
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நாளைய தீர்ப்பு படத்தில் நடிகராக அறிமுகமாகி பூவே உனக்காக படத்தின் மூலம் புகழ் பெற்றார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்று சினிமாவில் அசைக்கமுடியாத இடத்திற்கு சென்றுவிட்டார். இதுவரை 66 படங்களில் நடித்திருக்கிறார்.
விஜய் பிரித்தானியாவில் பிறந்த இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை 1999 ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். சங்கீதா விஜய்யின் தீவிர ரசிகை. ரசிகையாக விஜய்யை சந்திக்க வந்த சங்கீதாவை விஜய்யின் அப்பா அம்மாவிற்கு பிடித்துப்போக தங்கள் வீட்டு மருமகளாக்கிக்கொள்ளலாம் என யோசித்து விஜய்யிடம் கூற அவரும் அதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது.
பின்னர் இவர்களுக்கு திவ்யா சேஷா, சஞ்சய் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திவ்விய பேட்மிட்டனிலும் சஞ்சய் பிலிம் மேக்கரிலும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருமே வெளிநாட்டில் படித்து வருகிறார்கள். சங்கீதா பிள்ளைகளுடன் இருந்து வரை பார்த்துக்கொள்கிறார். விஜய் நடிப்பு, அரசியல் என பிசியாக இருந்து வருகிறார்.
இதனிடையே, சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த லியோ படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை ரூபாய் 600 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தை தொடர்ந்து விஜய், பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு உடன் கூட்டணி வைத்துள்ளார். இதில், மீனாட்சி, பிரஷாந்த், பிரபு தேவா, மைக் மோகன் எனப் பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பேங்காக்கில் நடந்து முடிந்து சென்னை திரும்பினார் விஜய். இந்நிலையில் விஜய் தன்னுடைய செல்லப் பிராணியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#Leofilm #ThalapathyVijay @actorvijay
— kiba Inuzuka (@kibainuzukaleo) November 18, 2023
Thalapathy with his pet 😍🤩🥳 pic.twitter.com/fEv7AWBHDW