அதெல்லாம் நமக்கு செட் ஆகாது… இந்தி பக்கமே தலைகாட்டாத தளபதி – காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

Author: Shree
13 June 2023, 5:39 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தந்தையின் உதவியுடன் சினிமாவில் அறிமுகமாகி இன்று “தளபதி” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் முன்னணி நடிகராக சிறந்து விளங்கி வருகிறார்.

விஜய் தனது 10 வயதில் வெற்றி என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பின்னர் 1992ல் நாளைய தீர்ப்பு படத்தில் நடித்து ஹீரோவானார். முதல் படத்தில் நிறைய விமர்சனங்களை எதிர் கொண்டாலும் தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் இவர் தந்தை இயக்கத்தில் நடித்து, அதன் பின்னர் பல முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து தனக்கென சினிமாவில் இடம் பிடித்தார். தற்போது இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் விஜய் விரைவில் அரசியலிலும் இறங்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இரண்டு மூன்று வெற்றி படங்களில் நடித்துவிட்டாலே இந்திக்கு செல்ல ஆசைப்படும் நடிகர்கள் மத்தியில் விஜய் ஸ்டார் நடிகர் ஆன பிறகும் இந்திக்கு செல்லாததற்கு காரணமே, இங்குள்ள நம் மக்களை மட்டும் இப்போதைக்கு மகிழ்ச்சி படுத்த தானாம். அப்புறம் அங்கே போகலாம் என விஜய் பல வருடங்களுக்கு முன்னர் கூறியிருக்கிறார். இதனால் விஜய் விரைவில் இந்தி படங்களில் நடித்து பான் இந்தியா நடிகராக மாறலாம் என எதிர்பார்க்க முடிகிறது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 335

    1

    1