தளபதி 69ல் நடிக்க முடியாது…விஜய் அரசியலால் விலகிய நடிகர்….!

Author: Selvan
9 November 2024, 2:54 pm

ஒரு பக்கம் விஜய் அரசியலை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் அவருடைய அரசியலுக்கு பல முக்கிய பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். அந்த வரிசையில் பிரபல நடிகரும் இணைந்துள்ளார்.

thalapathy vijay 69 is the last movie

எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார் . இப்படத்தை கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

அதிர்ச்சியில் படக்குழு

இந்நிலையில் படக்குழு நடிகர் சத்யராஜை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை மேற்கொண்டது .

sathyaraj exit thalapathy69

அதற்கு சத்யராஜ் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருப்பதால் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது அதனால் விஜய் கூட நடிக்க மாட்டேன் என பகிரங்கமாக கூறியிருக்கிறார்.இதனால் படக்குழு அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதையும் படியுங்க: சூப்பர் ஸ்டார் ரஜினியை கழுவி ஊத்திய சீரியல் நடிகர்..! பாபா திரைப்படத்தில் என்ன நடந்தது?


ஏற்கனவே நடிகர் சத்யராஜ் விஜயுடன் இணைந்து நண்பன்,தலைவா போன்ற படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 187

    1

    0