பீஸ்ட் படத்தால் நெல்சனுக்கு கை நழுவி போகிறதா “தலைவர் 169”.? : புதிய தகவல்..!
Author: Rajesh19 April 2022, 1:45 pm
தமிழக சினிமா ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்த திரைப்படம் தான் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம். இந்த திரைப்படத்திற்காக, 10 ஆண்டுகளுக்கு பின்னர் புரோமோஷன் புரோமோஷன் செய்வதற்கு, விஜய் பேட்டி கொடுத்தார். அந்த அளவுக்கு இந்த படத்தின் வெளியிட்டு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது படக்குழு.
ரசிகர்களின் பெரும் ஆதரவோடு கடந்த ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படம் விஜய்க்கு 65வது படம், இயக்குனர் நெல்சனுக்கு 3வது படம் ஆகும்.
எனவே அவர் விஜய்யை வைத்து இயக்குவதால் படத்தை நல்ல தரமாக இயக்குவார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதற்கு எல்லாம், நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் திரைப்படங்கள் நெல்சன் ஹிட் படங்களின் லிஸ்டில் இருந்தது தான்.
இதனிடையே பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன்பாகவே, ரஜினி நடிப்பில் தலைவர் 169 படத்தினை இயக்கும் வாய்ப்பினை பெற்றார் நெல்சன். இதனால் பீஸ்ட் பீஸ்ட் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் பீஸ்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தன. இணையதளங்களில் பீஸ்ட் படம் குறித்து நெட்டிசன்கள் படம் தோல்வி அடைந்ததாக மீம்ஸ்களை அள்ளி தெறிக்க விட்டனர்.
இதனால், தொடர்ந்து மனஉலைச்சலில் இருந்த நெல்சனுக்கு போன் செய்த விஜய், கண்டிப்பாக மீண்டும் சேர்ந்து படம் பண்ணலாம் என ஆறுதல் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால், தலைவர் 169 படத்தினை இயக்க மாட்டார் என்ற தகவல் இணையதளங்களில் வெளியாகி வந்தன. இதனிடையே, ‘தலைவர் 169’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர் நிறுவனம், நடிகர் ரஜினியிடம், நீங்களே இந்த படத்தின் இயக்குனரை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தாகவும் தகவல் வெளிவந்தன.
இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் தனது ட்டுவிட்டர் பக்கத்தில் தான் இயக்கிய மற்றும் இயக்கப்போகும் படங்கள் குறித்த தலைப்புகளை பதிவு செய்திருந்தார். அந்த பதிவில் இருந்த ‘தலைவர் 169’ படத்தின் தலைப்பை நீக்கி விட்டார். இதனையடுத்து ‘தலைவர் 169′ திரைப்படத்தினை தான் இயக்கப்போவதில்லை என்று நெல்சன் சூசகமாக தெரிவித்துள்ளாரா என்று நெட்சன்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் தான் மீண்டும், அந்த லிஸ்டில், “தலைவர் 169’ தலைப்பை பதிட்டுள்ளார். அதனால் கண்டிப்பாக “தலைவர் 169” படத்தின் இயக்குனர் நெல்சன் என்ற தகவல் வெளியாகியுள்ளன.