வாரிசு படத்தில் இப்படி ஒரு காட்சியா?.. “இதயபூர்வமாக அழுதேன்”.. – பிரபல இசையமைப்பாளர் உருக்கம்..!

Author: Vignesh
10 January 2023, 6:00 pm

தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.

இப்படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், சங்கீதா, சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் என ஒரு பிரபல நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய்.

vijay - updatenews360 g

வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான தெலுங்கு படங்களை போல இப்படமும் குடும்பத்தை சுற்றிய எமோஷ்னல் கதைக்களம் இருப்பதாக கூறப்படுகிறது, ரசிகர்களும் படத்தை காண தான் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில், விஜய்யின் வாரிசு படம் நாளை ரிலீஸ் ஆகிறது. படத்தின் முதல் நாள் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் நிலையில் அதை பார்க்கத்தான் ரசிகர்கள் எல்லோரும் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

vijay - updatenews360 g

இந்நிலையில் இன்று வாரிசு டீமுடன் விஜய் படம் பார்த்து இருக்கிறார். அப்போது எடுத்த போட்டோவை இசையமைப்பாளர் தமன் பகிர்ந்து இருக்கிறார்.

வாரிசு படத்தை பார்த்து அதிகம் எமோஷ்னல் ஆனதாக தமன் தெரிவித்து இருக்கிறார்.

“அண்ணா விஜய் அண்ணா.. எமோஷ்னல் சீன்களை பார்த்து இதயபூர்வமாக அழுதேன். கண்ணீர் விலைமதிப்பில்லாதது” என தமன் குறிப்பிட்டு இருக்கிறார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!