தகதகன்னு மின்னும் சருமத்தை பெற தமன்னா கொடுத்த பியூட்டி டிப்ஸ்..-இதைப் பின்பற்றினால் நீங்களும் ஜொலிக்கலாம்..!

Author: Vignesh
25 April 2023, 1:30 pm

நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர். என்னதான் மேக்கப்பில் தனியாக ஜொலித்தாலும், மேக்கப் இல்லாமலும் நடிகை தமன்னா அழகாகதான் இருப்பார்.

தற்போது உள்ள பெண்களுக்கு வயது கொஞ்சம் கொஞ்சம் போக அழகும் இளமையும் குறைந்துக் கொண்டே போகும். எந்த நேரத்தில் எந்ந உணவுகளை சாப்பிடுகிறோம் என்பது மட்டுமல்ல, அவை நமது உடலுக்கு ஊட்டச்சத்துக்களை அள்ளித் தருவதாகவும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.

Tamannaah -updatenews360

அந்த வகையில் தமன்னாவின் அழகு ரகசியம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, முடி வளர்ச்சிக்கு அதிகம் உதவுவது இந்த வெங்காயச்சாறு. வெங்காயத்தில் இருக்கும் கத்தகம் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து ஆரோக்கியமான முடி வளர்ச்சியைக் கொடுக்குமாம் இதை தான் தமன்னா அவரது கூந்தலுக்கு பயன்படுத்துகிறார்.

தமன்னா முகத்திற்கு எப்போது தயிர்தானாம். தயிரில் இருக்கும் துத்தநாகம் முகத்தில் இருக்கும் எண்ணெய் உற்பத்தியை நிறுத்தி இயற்கையான அழகைக் கொடுக்குமாம்.

மேலும், கற்றாழையில் அதிக குளிர்ச்சி தன்மை இருப்பதால் முகத்தை எப்போது குளிர்ச்சியாகவும் ஈரப்பதமாக்கவும் வைத்திருக்க அவர் இதை பயன்பணடுத்துவதை வழக்கமாக வைத்துள்ளாராம்.

தமன்னா இயற்கையான சருமத்திற்கு சிறந்த பேஸ்மாஸ்குகளைத் தான் பயன்படுத்திறாராம். அதில் முல்தானி மிட்டி, சந்தனம், மஞ்சள், வேப்ப இலைகள் கொண்டு வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்துகிறாராம்.

Tamannaah -updatenews360

தமன்னாவின் சருமத்தை எப்போது பளபளப்பாகவும், சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர் அதிகம் எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளராம். இவர் எப்போது தண்ணீர் அதிகம் குடிப்பாராம்.

தோல்களை பராமரிப்பதற்கு மூன்று விசயங்கள் மிகவும் முக்கியமாகும். சுத்தப்படுத்துதல், டோனிங் மற்றும் ஈரப்பதமாக்குதல் இவற்றை வழக்கமாக சேர்த்துக் கொள்வது அவசியமாம்.

Tamannaah -updatenews360

உங்கள் முகத்தில் ஏற்படும் பருக்களினால் உருவாகும் ஓட்டைகளை அடைப்பதற்கு ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.

இது மட்டும் இல்லாமல், ஆரோக்கியமில்லாத உணவுகள், எண்ணெய் பொரித்து எடுக்கப்படும் உணவுகளை தமன்னா எப்போது தவிர்த்து விடுவாராம்.

மேற்கண்ட டிப்ஸ்களை நீங்களும் பின்பற்றி தமன்னாவைப் போல நீங்களும் பளபளப்பாக மாற வாழ்த்துக்கள்.

Tamannaah -updatenews360
  • gangai amaran singing for bharathiraja video viral on internet பாட்டு பாடி பாரதிராஜாவை ஆற்றுப்படுத்திய கங்கை அமரன்… மனதை நெகிழ வைத்த வீடியோ…