ரீல்ஸ் கூட எங்களுக்கு பிரச்சினைதான்; 15 நொடிக்கே இப்படியா;தமன்னா ஓபன் டாக்
Author: Sudha15 July 2024, 3:33 pm
தமன்னாவின் திரைப்பட ஜார்னி 2005 ல் தொடங்கி இன்று வரை நில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. தென் இந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் தமன்னா.
சிறு வயது முதலே நடிகையாக வேண்டும் என்பதுதான் தமன்னாவின் கனவாக இருந்திருக்கிறது.

ஒரு பேட்டியில் சினிமாவில் அடியெடுத்து வைத்ததும் எத்தனையோ சவால்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது என தமன்னா சொல்லியிருக்கிறார். ஆனாலும் நடிகையாக நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாகவும் அதற்காக அயராது உழைத்ததாகவும் அதனால் அந்த கனவு மெய்யானதாகவும் சொல்லியுள்ளார்.
மேலும் தமன்னா அந்த காலத்தில் தியேட்டர்களில் மட்டுமே படம் பார்த்தார்கள். இப்போது காலம் மாறி விட்டது. ஓ.டி.டி.யிலும் நிறைய படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கிடைக்கிறது. இப்போதெல்லாம் ரீல்ஸ் பார்த்து கூட ரசிகர்கள் பொழுதை சந்தோஷமாக கழிக்கிறார்கள்.அதனால் 15 நொடி அளவே ஓடும் ரீல்ஸ் க்கு கூட கதாநாயகிகள்அதிகம் மெனக்கெட வேண்டி இருக்கிறது.உடை ஆபரணம் ஒப்பனை போன்ற எல்லாவற்றிலும் கவனமாய் இருக்க வேண்டியுள்ளது என சொல்லியிருக்கிறார்.