“ஐஸ்வர்யா எங்க வீட்டுக்கு வரும் மகள்”… மகனின் காதல் குறித்து தம்பி ராமையா பெருமிதம்!

Author: Shree
28 October 2023, 3:07 pm

ஒரு காலத்தில் ஹீரோவாக நடித்து வந்த ஆக்சன் கிங் அர்ஜூன் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார். அப்படி இவர் நடித்து தமிழில் வெளியான இரும்புத்திரை, கொலைகாரன் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்துவரும் லியோ படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள். இதில் ஐஸ்வர்யா தமிழில் விஷாலுக்கு ஜோடியாக பட்டத்து யானை படத்தில் நடித்திருந்தார்.

ஐஸ்வர்யா நீண்ட காலமாக தம்பி ராமையாவின் மகன் உமாபதியுடன் காதலில் இருந்துவருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் தகவல் பரவி வைரலாகியது. மேலும் அர்ஜுனும் தம்பி ராமையாவும் இணைந்து இருவரது திருமண தேதியை அறிவிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை இந்தத் தகவலை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.

இவர்களுக்குள் காதல் எப்படி மலர்ந்தது என நீங்கள் கேட்கலாம், நடிகர் அர்ஜுன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி ராமைய்யா போட்டியாளராக இருந்துள்ளார். அப்போது அந்த செட்டிற்கு அடிக்கடி ஐஸ்வர்யா வந்துபோவதுண்டாம். அங்கு தான் இருவரும் நட்பு ஆரம்பித்து பின்னர் காதலாக மாறியுள்ளது. இது அர்ஜுனுக்கு தெரியவர ஆரம்பத்தில் கொஞ்சம் யோசித்தாலும் பின்னர் சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி மிகவும் நல்ல குணம் உடையவராக இருந்துள்ளார் அதை நம்பி தன் மகளை கட்டிக்கொடுக்க அர்ஜுன் ஓகே சொல்லிவிட்டார். உமாபதி யாஷிகாவுடன் சேர்ந்து மணியார் குடும்பம் என்ற திரைப்படத்தில் நடித்ததால் அவருடன் கிசுகிசுக்கப்பட்டார்.

umapathy aishwarya arjun

இதனிடையே நேற்று ஐஸ்வர்யா அர்ஜுன் – உமாபதிக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் அர்ஜுன் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் பிரம்மாண்டமாக நடந்தது. அதன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி காட்டு தீயாய் பரவியது. இந்நிலையில் மகனின் திருமணம் குறித்தும் அவரது காதல் குறித்தும் முதன்முறையாக பேட்டி கொடுத்துள்ள நடிகர் தம்பி ராமையா,

என்னை பொறுத்தவரை குழந்தைகள் என்பவர்கள் என்னால் பிறந்தார்கள். எனக்காக பிறக்கவில்லை. அவர்கள் வாழ பிறந்தார்கள். அவர்களுக்கு எது மகிழ்ச்சியோ அதை முறைப்படி செய்துக்கொடுப்பது தாய், தந்தையர் கடமை. மருமகளாக வரப்போகும் ஐஸ்வர்யா குறித்து ஒரு வார்த்தை சொல்லுங்கள் என கேட்டதற்கு ஐஸ்வர்யா பாப்பா எங்கள் வீட்டுக்கு வரும் மகள். அதே போல் என் மகனும் அர்ஜுன் வீட்டிற்கு செல்லும் ஒரு மகன்.

ஐஸ்வர்யா எங்களுக்கு இன்னொரு மகளாக எங்கள் வீட்டிற்கு வரப்போகிறார் என்றார். கல்யாண வேலைகள் ஆரம்பித்துவிட்டீர்களா என தொகுப்பாளினி கேட்டதற்கு? பெண் சார்ந்த விஷயம் என்பதால் பெண்ணுக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் எனவே அதையெல்லாம் அர்ஜுன் சார் தான் சொல்லுவார். அவருடன் கலந்துபேசாமல் நானாக எதையும் பேசவே மாட்டேன் என தம்பி ராமையா சம்மந்தி அர்ஜுன் குறித்து மிகவும் பெருமையாக பேசியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 594

    1

    1