பொம்பள புள்ளைங்க கிடுக்கிடுன்னு வளர்ந்துடறாங்களேப்பா – தங்கமீன்கள் சாதனா இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க!

Author: Shree
23 April 2023, 12:02 pm

தமிழ் சினிமாவின் பொன்னான இயக்குநர்களில் ஒருவரான ராம் வித்யாசமான உணர்வுபூர்வமான படங்களை எடுத்து ரசிகர்களுக்கு அந்த கேரக்டர் மீது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கூடியவர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றிய ராம் கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட நான்கு படங்களை இயக்கியுள்ளார். இது அனைத்துமே வெற்றி திரைப்படங்கள் தான்.

இந்நிலையில் 2013ம் ஆண்டு வெளியான தங்க மீன்கள் படத்தில் மகளுக்கு பாசக்கார அப்பாவாக நடித்து அசத்தியிருப்பார். அப்படத்தில் செல்லம்மா என்ற கேரக்டரில் நடித்தவர் தான் குழந்தை நட்சத்திரம் சாதனா. அவரது நடிப்பு இன்றளவும் பேசப்படும். அதன்பிறகு ராம் இயக்கத்தில் வெளியான பேரன்பு படத்திலும் அவர் நடித்தார்.

இந்நிலையில் நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டிருக்கும் சாதனா அடையாளம் தெரியாத அளவிற்கு கிடுகிடுவென வளர்ந்துவிட்டார். அவரது லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வெளியிட, அட நம்ம செல்லம்மாவா இது? என எல்லோரும் செம ஷாக் ஆகிவிட்டனர். பொம்பள பிள்ளைங்க எல்லாருமே பார்த்த சீக்கிரத்தில் கிடுகிடுன்னு வளர்ந்திடுறாங்களே என கூறி வருகிறார்கள்.

https://www.instagram.com/p/CaRaOH7gZ3n/

  • celebrity reply to Sathyaraj's daughter who criticized Vijay விளக்கு பிடிச்சாங்களா? விஜய்யை விமர்சித்த சத்யராஜ் மகளுக்கு பிரபலம் பதிலடி!
  • Close menu