சுரங்க போராட்டம்;வீரனின் உண்மைக்கதை; கலக்கும் தங்கலான் டிரெய்லர்,..

Author: Sudha
11 July 2024, 10:49 am

ஆங்கிலேயர் ஆட்சியின் போது, தங்கச் சுரங்கம் அமைக்க ஆங்கிலேயர்களின் நிலத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டனர், அவர்களை எதிர்த்து போராடிய பழங்குடியினத் தலைவர் தங்கலானின் துணிச்சலான போராட்டத்தைப் பற்றிய படம் தங்கலான் என சொல்லப் படுகிறது.


பா.ரஞ்சித் இயக்கத்தில் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்சன்சின் கீழ் கே. இ. ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் மற்றும் பசுபதி முக்கிய கதாப் பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சியான் 61 என்ற தற்காலிகத் தலைப்புடன் டிசம்பர் 2021 இல் படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தங்கலான் எனும் படத்தின் தலைப்பு அக்டோபர் 2022 இல் வெளியிடப்பட்டது. ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

தங்கலான் திரைப்படத்தின் டிரெயிலர் நேற்று வெளியிடப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது.

  • Vijay TV couple Decides Honeymoon in the Amazon forest கல்யாணம் முடித்த கையோடு காட்டுக்குள் ஹனிமூன்…. விஜய் டிவி ஜோடியின் விசித்திர முடிவு!