குரங்கு மூஞ்சிய வச்சிக்கிட்டு நீ எதுக்கு நடிக்க வர… பிரபல நடிகையை திட்டி தீர்த்த தங்கர் பச்சான் ..!

Author: Vignesh
2 August 2024, 5:13 pm

ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை கௌசல்யா இப்போது, குணசித்திர வேடங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கௌசல்யா தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் ஒன்றை பற்றி பேசியுள்ளார்.

அதில், நான் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த திரைப்படத்தின் இயக்குனர் தங்கப்பச்சான் அந்த படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். ஒரு காட்சியில் அவர் சொல்லிக் கொடுத்ததை நான் சரியாக செய்யவில்லை.

உடனே அவர் நீ எல்லாம் குரங்கு மூஞ்சிய வச்சுக்கிட்டு எதுக்கு நடிக்க வர என்று என்னை பார்த்து திட்டினார். எல்லோர் முன்பும் என்னை அப்படி திட்டியது எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆனாலும், நம் வாங்கும் சம்பளத்திற்காக வேலை செய்யவில்லை. ஒரு விஷயத்தை நான் சரியாக செய்ய வேண்டும் என்று நினைத்து அவர் திட்டியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால், அவர் எந்த காட்சிக்காக இப்படி திட்டினார்கள் என்று எனக்கு எப்போதும் நினைவுக்கு வரவில்லை. அவர் திட்டியது மட்டும் என்னால் மறக்க முடியாது. அவர் அப்படி திட்டியதால், அடுத்து நாம் சரியாக வேலை செய்ய வேண்டும் இல்லை என்றால் அவர் திட்டுவார் என்ற பயம் இருந்தது.

இதேபோல நிறைய இயக்குனர்களிடம் திட்டுவாங்கி இருக்கிறேன். ஆனால், அதை ஒரு பாடமாக எடுத்து மீண்டும் அதை செய்யக்கூடாது என்று முயற்சி செய்து நடித்திருக்கிறேன். அதிலிருந்து, நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் கௌசல்யா பேசியிருந்தார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ