தனி ஒருவன் 2-வில் வில்லன் இவரா.. யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க, செம மாஸ்..!
Author: Vignesh12 December 2023, 2:15 pm
ஜெயம், எம் குமரன், உனக்கும் எனக்கும் என தொடர்ச்சியாக ரீமேக் படங்களை இயக்கிய மோகன் ராஜா வேலாயுதம் படத்தை தொடர்ந்து திரைக்கதை எழுதி இயக்கிய திரைப்படம் தான் தனி ஒருவன். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியானது.
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் ஆகஸ்ட் 28ஆம் தேதியுடன் மோகன் ராஜா இயக்கத்தில் இப்படத்தின் 8 ஆண்டுகள் நிறைவை ஒட்டி தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட் வெளியிட இருக்கிறது படக்குழு. முந்தைய படத்தில் வில்லனான சித்தார்த் அபிமன்யு கதையில் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வில்லனாக யார் நடிக்க இருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இதனிடையே, ஜெயம் ரவி நயன்தாரா அரவிந்த்சாமி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் ஆதி தமிழா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இதனிடையே, இணையதளத்தில் கேலிக்குள்ளான இயக்குனர் மோகன்ராஜா தன் மீதான இமேஜை மொத்தமாக மாற்றிய படம் தான் தனி ஒருவன். இந்த படத்தில், அரவிந்த்சாமியின் கதாபாத்திரத்தை மிக சிறப்பாக அமைத்திருந்தார் மோகன் ராஜா. நேர்த்தியான திரை கதையின் மூலம் விறுவிறுப்பான படமாக உருவாக்கி இருந்தார்.
ரீமேக் மட்டும் இல்லை தன்னால் சொந்தமாக திரைக்கதை எழுதி நல்ல படங்களை கொடுக்க முடியும் என மோகன் ராஜா அனைவருக்கும் தனி ஒருவன் மூலம் நிரூபித்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில், இந்த படத்தில் யார் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
இதனிடையே, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.