ஓவர் அலப்பறை செய்த லைலா.. செட்டே ஆகாதுன்னு பிரபல நடிகை பக்கம் திரும்பிய இயக்குனர்..!

Author: Vignesh
24 July 2024, 6:01 pm

தமிழ் சினிமா ரசிகர்களை தன் குழந்தை போன்ற எக்ஸ்பிரஷன் கியூட்டான பேச்சு உள்ளிட்டவற்றால் கவர்ந்திழுத்தவர் நடிகை லைலா. இவர் தமிழ்த் திரையுலகில் கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் லைலா அறிமுகமானார். தொடர்ந்து விஜயகாந்த், அஜித், சூர்யா, விக்ரம், பிரசாந்த், சரத்குமார் ஆகியோருடன் சேர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தில், தீனா, மௌனம் பேசியதே ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.

Laila - updatenews360

இந்நிலையில், தயாரிப்பாளர் கலைப்புலி தானு பேட்டி ஒன்றில் லைலாவின் செயல் குறித்து பேசி உள்ளார். அதில், பிரபு தேவாவுக்கு விஐபி படத்தில் நடிகை சிம்ரன் ரோலில் முதலில் நடிகை லைலா தான் நடிக்க இருந்தார். படத்தின் பூஜைக்கு லைலாவும் ரம்பாவும் கலந்து கொண்டனர். அப்போது, ரிசப்ஷன் இடத்திலே ப்ரொடெக்ஷன் டீமிடம் சம்பளத்தை செக்கில் சைன் போட்டு கொடுத்துவிட்டேன்.

தயாரிப்பாளர் செக்கை கொடுக்க சொன்னார் என்று அவர்களும் லைலாவிடம் கொடுத்தற்கு ஏன் தயாரிப்பாளர் என்னை வந்து பார்க்கல என்ன அர்த்தம் இது என்ன ப்ரொடெக்ஷன் என கூறியதாக ப்ரொடெக்ஷன் மேனேஜர் செல்வம் என்னிடம் சொன்னார். ஆரம்பத்தில், இவ்வளவு பிரச்சனை பண்ணுதே என்று தூக்கிடலாம் என்று அந்த படத்தில் இருந்து லைலாவை தூக்கிவிட்டு சிம்ரனை நடிக்க வைத்தோம் என்று தயாரிப்பாளர் கலைப்புலி தானு தெரிவித்துள்ளார்.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!