கீர்த்தி சுரேஷ் உடன் சிஎஸ்கே போட்டியை பார்க்க வந்த ‘அந்த’ நடிகர் : இதை கவனிச்சீங்களா?

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2023, 1:38 pm

கீர்த்தி சுரேஷ் உடன் சிஎஸ்கே போட்டியை பார்க்க வந்த ‘அந்த’ நடிகர் : இதை கவனிச்சீங்களா?

நடப்பு ஐபிஎல் தொடரின் 6வது போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. சென்னை அணியின் போட்டி நடக்கிறது என்றாலே கூட்டம் அலைமோதும்.

நேற்றும் போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். குறிப்பாக சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் இந்த போட்டியை காண வந்தனர்.

தோனியை காணவே பார்வையாளர்கள் குவிந்தனர், நேற்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின.

எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியடத்தில் நடந்த இப்போட்டியை நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் கண்டுகளித்தனர்.

நடிகர்கள் சிவகார்த்திகேயன்-சதீஷ் ஆகியோர் போட்டியை கண்டுகளித்தனர், அதே போலநடிகர் விஜய்யின் சமூக வலைதள கணக்குகளின் அட்மின், சி.எஸ்.கே போட்டியை கண்டுகளித்தார்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் ஐ.பி.எல் போட்டியை காண்பதற்காக நேற்று சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்திருந்தார். அவருடன் நடிகைகள் இவானா, நதியா ஆகியோர் வந்திருந்தனர், இவர்கள் தோனி எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் முதல் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக நடிகர் தனுஷ், அவர் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ பட லுக்கிலேயே வந்தார். நீண்ட தலைமுடி தாடியுடன் வந்த தனுஷை ஏராளமான ரசிகர்கள் நேரில் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்,.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 1541

    18

    8