நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் நடிகர் சிம்புவை காதலித்து வந்த நயன்தாரா, இருவருக்கு ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்துவிட்டனர். சிம்புவை தொடர்ந்து, நடன இயக்குனர் பிரபுதேவாவை தீவிரமாக காதலித்து மதம் மாறி திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு சென்றா நயன் தாராவுக்கு, பிரபுதேவாவின் முதல் மனைவி போட்ட முட்டுக்கட்டையால், பிரச்சனைகளை தொடர்ந்து அவரையும் பிரிந்து இருந்து வந்தார்.
இதனால் சற்று மன வருத்ததத்தில் இருந்த நயன்தாரா சினிமாவிற்கு சற்று பிரேக் எடுத்து பில்லா படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். இதனைதொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நானும் ரவுடி தான் படத்தில் நடிக்க கமிட்டாகி, அந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் தனக்கு பக்கபலமாக இருந்த விக்னேஷ் சிவனை காதலித்து அதன்பின் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் இருவரும் இருந்து வந்தனர்.
இவர்கள் இருவரும் சுமார் 7 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஆண்டு திருமணம் செய்து வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்து வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, சமீபத்தில் விக்னேஷ் சிவன் அளித்த பேட்டியொன்றில், நானும் ரவுடி தான் படம் உருவான கதையை தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து கூறுகையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் படமான வை ராஜா வை படத்திற்கும் தாங்கள் தான் டிசைன் செய்ததாகவும், அப்போது ஐஸ்வர்யா மேம் தனுஷிடம் தங்களை பற்றி தெரிவித்து, அதன்பின் விஐபி படத்தில் நடித்த போது தான் தனுஷிடம் அந்த கதையை கூறியதாகவும், உடனே தான் தயாரிக்கிறேன், யார் நடிகர், நடிகை என்று கேட்டதற்கு, அப்போது கெளதம் கார்த்திக் தான் நடிக்க இருந்தது அதன்பின் விஜய் சேதுபதி ஓகேவானார் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், நயன்தாரா எப்படி வந்தார் என்ற கேள்விக்கு, கதையை யார் கிட்ட சொல்லனும்-ன்னு தனுஷ் கேட்டதற்கு, தான் நஸ்ரியாவை யோசித்து வைத்திருப்பதாக கூறியதற்கு, முக்கிய ரோல் என்பதால் தனுஷ் சார், நயன்தாராவை பார்த்து கதையை தெரிவிக்க சொன்னதாக விக்னேஷ் சிவன் தெரிவித்தார்.
இதனிடையே, ஆட்டோவில் சென்று 1.30 மணிநேரம் கதையை கூறிவிட்டதாகவும், யாரும் பண்ணாத ஒன்றினை நயன்தாரா அப்போது செய்தது இதுவரையில் யாரையும் பார்த்ததில்லை எனவும், போன்னை ஆஃப் செய்து கதையை கூறுங்கள் என்று நயன்தாரா கேட்டதும் தனக்கு நம்பிக்கை வந்து விட்டதாகவும், அதன்பின் அவர் கேட்டு காமெடியால், விழுந்து விழுந்து சிரித்துவிட்டார் என நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவன் தெரிவித்தார்.
மேலும், கதை கூறி முடித்தவுடனே தான் படம் பண்ணுகிறேன் என்று தெரிவித்து விட்டார். அப்படி தனுஷ் மட்டும் இந்த படத்தில் நயன்தாராவிடம் சிபாரிசு செய்து அனுப்பாமல் இருந்திருந்தால், விக்னேஷ் சிவன் நஸ்ரியா அல்லது வேறு ஒரு நடிகையை வைத்து நானும் ரவுடி தான் கதையை எடுத்து இருப்பார். அப்படி செய்திருந்தால் விக்னேஷ் சிவனுக்கும் நயனுக்கும் காதலும் திருமணமும் நடந்தே இருக்காது என்று நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
This website uses cookies.