அந்த ஹீரோவுக்கு நடிக்கவே தெரியல : பிரபல நடிகரை சீண்டிய நடிகர் கவின்!!!

Author: Udayachandran RadhaKrishnan
25 February 2023, 5:46 pm

நடிகர் கவின் சின்னத்திரை மூலம் பிரபலமான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.

இடையில் காதல் சர்ச்சை என விமர்சனம் எழுந்தாலும், இவரோட கேரியரில் கவனம் செலுத்தி வந்தார். தொடர்ந்து வெள்ளித்திரை வாய்ப்புகள் குவிந்தது.

கதாநாயகனாக முதல் படமாக நட்புனா என்னனு தெரியுமா படத்தில் நடித்தார், பின்னர் லிப்ட் படத்தில் நடித்தார். படம் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

தற்போது வெளியான டாடா படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து ஊர்குருவி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியல் பங்கேற்ற கவின், எந்த நடிகருக்கு 30 நாளில் நடிகராகது எப்படி என்ற புத்தகத்தை வழங்குவீர்கள் என தொகுப்பாளர்கள் கேள்வி எழுப்பிய போது, நடிகர் அரவிந்த் சாமிக்கு வழங்குவேன் என கூறியிருந்தார்.

இதைப் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர். ஆனால் உண்மையில் வேறு ஒரு கேள்வி கேட்டு அதற்கான விடையை மற்றொரு கேள்விக்கு மேட்ச் செய்வது போல அந்த நிகழ்ச்சி இருந்தது.

இதன் பின்னர் நடிகர் கவினே இதற்கு அழகாக ஒரு விளக்கமும் அளித்திருந்தார்.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!