67 வயது ஹீரோவுக்கு 68 வயது சத்யராஜ் தந்தை..! ஜீரணித்துக் கொள்ள முடியாத கேரக்டர் என நெட்டிசன்கள் ஷாக்..!

Author: Vignesh
27 January 2023, 2:30 pm

சினிமாவில் ஹீரோக்களை காட்டிலும் ஹீரோயின்கள் மிகக் குறுகிய காலத்திலேயே மார்க்கெட்டை இழந்து ஒரு காலகட்டத்தில் ஹீரோ உடன் ஜோடி போட்ட நடிகைகள் அதன் பிறகு அக்கா, அம்மா கேரக்டர்களில் நடிக்கும் நிலை சினிமாவில் ஏற்பட்டுள்ளது.

இதை பல படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் தெலுங்கு சினிமாவில் சில கதாபாத்திர தேர்வு யாராலும் ஜீரணித்துக் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கிறது. இந்த ஹீரோவுக்கு இவர் தந்தையா, இவர் அம்மாவா என்று வயது வித்தியாசம் பார்க்காமல் நடித்து கொடுத்திருப்பார்கள்.

sathyaraj-updatenews360

இது சில சமயங்களில் கேலி, கிண்டல்களையும் ஏற்படுத்தும். அந்த வகையில் சத்யராஜுக்கு தற்போது 68 வயது உள்ள நிலையில் அவருக்கு மகனாக 67 வயதுடைய ஹீரோவை போட்டிருப்பது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

chiranjeevi - updatenews360

அதாவது தெலுங்கு சினிமாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான வால்டர் வீரய்யா படத்தில் சிரஞ்சீவி தந்தையாக சத்யராஜ் நடித்திருந்தார். இவர்களுக்கு கிட்டத்தட்ட ஒரே வயது தான் ஆகிறது.

chiranjeevi - updatenews360

இதனால், எப்படி அப்பா, மகனாக ஒரே திரையில் பார்க்க முடியும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி சிரஞ்சீவிக்கு போட்டியாக வெளியான வால்டர் வீரய்யா படத்தில் பாலகிருஷ்ணாவின் அதாவது வீர சிம்மா ரெட்டி படத்திலும் இதே நிலைமை தான் ஏற்பட்டிருந்தது.

balakrishna veera simha reddy- updatenews360

வீர சிம்மா ரெட்டி படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு அம்மாவாக ஹனி ரோஸ் நடித்திருந்தார். அதாவது பாலகிருஷ்ணாவை விட கிட்டத்தட்ட 31 வயது இளமையானவர் ஹனி ரோஸ். மகள் வயது உடைய நடிகையை அம்மாவாக படக்குழு தேர்ந்தெடுத்தது படத்திற்கு மோசமான விமர்சனத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

sathyaraj-updatenews360

தொடர்ந்து இதுபோன்று கதாபாத்திரத்திற்கு தேவையான நடிகர்கள் மற்றும் நடிகைகளை தேர்வு செய்வதில் தெலுங்கு சினிமா கோட்டை விட்டு வருவதாக சினிமா விமர்சகள் தெரிவித்துள்ளனர். ஆகையால் தான் அந்தப் படங்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகி வருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

balakrishna veera simha reddy- updatenews360
  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!