உருவம் மட்டும் பெருசல்ல.. நடிகர் நெப்போலியனுக்கு மனசும் பெருசுதான் : ஏழைகளுக்கான ரியல் ஹீரோ!!!
Author: Udayachandran RadhaKrishnan21 December 2022, 8:41 am
தமிழ் சினிமாவில் உள்ள உயர்ந்த நடிகர்களில் ஒருவர் நெல்போலியன். முருக்கு மீசை, அதிக உயரம், கட்டை குரல் என அசத்தியவர் இவர், சண்டை காட்சி எல்லாம் மிகவும் அசால்ட்டாக நடிப்பார்.
நிறைய படங்கள் தொடர்ந்து நடித்துவந்த இவர் மார்க்கெட் குறைய ஆரம்பித்ததும் அரசியலில் ஈடுபட்டு அதில் கவனம் செலுத்தி வந்தார்.
இப்போது திருமணம் ஆகி இரண்டு மகன்களுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அங்கு சொந்தமாக கம்பெனி ஒன்றை நடத்திவரும் அவர் விவசாயமும் செய்கிறார். அவ்வப்போது கிடைக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.
நெப்போலியன் மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், 10 வயதிற்கு மேல் இவரால் நடக்க முடியவில்லையாம்.
பின் தமிழகத்தில் திருநெல்வேலி பக்கத்தில் பாரம்பரிய வைத்தியம் செய்பவர் பற்றி அறிந்து தனது மகனை அழைத்து சென்றுள்ளார். அங்கு இட வசதி இல்லாமல் சிகிச்சைக்கு பலரும் கஷ்டப்பட உடனே அங்கு பெரிய மருத்துவமனை ஒன்றை கட்டியுள்ளார் நெப்போலியன்.
கடந்த 12 ஆண்டுகளாக அந்த மருத்துவமனையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் நெப்போலியன். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் அங்கு சிகிச்சைக்காக வருகிறார்களாம். இங்கு வருபவர்களிடம் சிகிச்சைக்காக பணம் எதுவும் வாங்கப்படுவதில்லையாம்.