கைத்தட்டளுக்காக காசு கொடுத்து ஆட்களை வரவழைத்த நடிகர்.. கடுப்பான பிரபலம்.. இப்படிலாமா பண்ணுவாங்க..!

Author: Rajesh
12 March 2023, 6:30 pm

வெண்ணிலா கபடி குழு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான காமெடியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சூரி. இப்படி தனது காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது விடுதலை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

விடுதலை படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில், இப்படத்தின் டீசர் மற்றும் ஆடியோ லான்ச் நிகழ்வு நடைபெற்றது. முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இளையராஜா அவர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில், முதல் முறை கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள சூரிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில், சூரி பெயரை சொல்லும் போதெல்லாம் ரசிகர்கள் கைத்தட்டி கத்தி கூச்சலிட்டனர். மேலும், இளையராஜா பேசும் போது அவரை பேசவிடாமல் கத்தியதால் மைக்கை கொடுத்து விட்டு போய் விடுவேன் என்று கூறும் அளவிற்கு கடுப்பாகி கோபப்பட்டார். அதன் வீடியோ இணையத்தில் வைரலானது.

soori
soori

இந்நிலையில், கைத்தட்டளுக்காக சூரி, காசு கொடுத்து ஊரிலிருந்து வேன் மூலம் ஆட்களை வரவழைத்தார் என்று விழாவுக்கு வந்த பலரும் முனுமுனுத்தனர். இதேபோல், சந்தனமும் ஹீரோ ஆன போது, இப்படி காசு கொடுத்து கைத்தட்டளுக்காக ஆட்களை வரவழைத்ததாக்கவும் ஒரு சமயம் கிசுகிசுக்கப்பட்டது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 475

    0

    0