பிரபல நடிகையை குடிகாரியாக மாற்றிய நடிகர்… மீண்டு வந்து விருதுகளை குவித்த நடிகை!
Author: Udayachandran RadhaKrishnan21 March 2025, 11:30 am
பிரபல நடிகைக்கு மது அருந்த வத்து குடிகாரியாக மாற்றிய அவரது கணவர் மற்றும் நடிகரை விவாகரத்து செய்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கவிதா மனோரஞ்சனி என்ற இயற்பெயர் கொண்ட நடிகை ஊர்வசி, தமிழ் சினிமாவில் முந்தானை முடிச்சு படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பிரபலமானார்.
சினிமாவில் இவர் கோலோச்சியதால் பெரும் புகழை சம்பாதித்தார். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை என்பது அவருக்கு பெரிய சவாலாகவே இருந்தது. இவர் மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவருக்கும் ஒரு மகள் உள்ள நிலையில், மனோஜ் கே ஜெயன், ஊர்வசியை மது குடிக்க வைக்க வற்புறுத்தினார். கொடுமைப்படுத்தி மது குடிக்க வைத்தால் அவர் குடிகாரியாகவே மாறினார்.
படத்தில் நடிப்பதை கணவர் நிறுத்தியதால், நொந்து போன ஊர்வசி, மதுவுக்கு அடிமையானார். பின்னர் உறவினர்கள், நண்பர்கள் அவரை மதுவில் இருந்து விடுவிக்க அறிவுறுத்தினர்.
ஒரு சிறந்த நடிகையாக இருக்க வேண்டியவள் நீ, மதுவை விட்டுவிடு என தினமும் நண்பர்கள், உறவினர்கள் புத்திமதி சொல்லி சொல்லி அந்த பழக்கத்தில் இருந்து விடுபட்டார்.

பின்னர் கணவர் மனோஜ் கே ஜெயனை விவாகரத்து செய்த அவர், சிவபிரகாசம் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு மகன் பிறந்தான். தற்போது மகன், மகள், கணவர் என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் ஊர்வசி.
2000ஆம் ஆண்டு முதல் 2008 வரை பெரியதாக சினிமாவில் தலை காட்டாத ஊர்வசி, பின்னர் 2009 முதல் நடிக்க ஆரம்பித்தார். தொடர்ச்சியாக நடித்த அவர், அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி, மகளிர் மட்டும், சூரரைப் போற்று படங்களுக்காக சிறந்த நடிகை என பிலிம் பேர் விருதுகளை வாங்கினார்.
தொடர்ந்து அம்மா கேரக்டர், பாட்டி கேரக்டர்களில் நடித்து, இந்தளவு நடிக்க முடியுமா என சக நடிகைகளுக்கே போட்டியாக திகழ்ந்து வருகிறார்.