கவர்ச்சி நடிகையை திருமணம் செய்ய ஆசைப்பட்ட வாரிசு நடிகர்.. உண்மையை உடைத்த பிரபல பாடகர்..!
Author: Vignesh9 March 2023, 12:00 pm
தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னியாக சில்க் ஸ்மிதா ஒரு காலத்தில், வலம் வந்தார். அந்த காலத்தில் ஒரே ஐட்டம் நடிகை என்றால் அது சில்க் தான். இவரது முகப் பாவனை, கவர்ச்சி, கொஞ்சி பேசும் வார்த்தைகள், நடிக்கும் அழகு என உச்சி முதல் பாதம் வரை சில்க் ஸ்மிதாவை ரசிக்காதவர்களே கிடையாது என்று சொல்லலாம்.

இப்படிப்பட்ட சில்க் ஸ்மிதா ஒரு படத்தில், ஒரு பாடலில் ஆடுகிறார் என்றால் இளசுகள் முதல் பெரியவர்கள் வரை திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக செல்வார்கள் அந்த அளவுக்கு சில்க்கின் செல்வாக்கு இருக்கும்.
இதன் காரணமாக சில்க்குக்கு பல படங்களில் நடிக்கும் நடிகைகளை காட்டிலும் தயாரிப்பாளர்கள் சம்பளத்தை அள்ளி அள்ளிக்கொடுப்பார்கள். இதனிடையே, சில்க் ஸ்மிதாவை மனம் முடிக்க ஆசைப்பட்டு எத்தனையோ பிரபலங்கள் முயற்ச்சி செய்து வந்தனர்.

ஆனால் நடிகை சில்க் ஸ்மிதா அசால்டாக அவர்கள் அனைவரையும் உதாசீனப்படுத்தி உள்ளார். அதற்கு காரணமாக, தன் உடலுக்கு ஆசைப்படுபவர்களை காட்டிலும், மனதை புரிந்துகொள்பவர்களே சிறந்த மனிதர்கள் என சில்க் ஸ்மிதா அப்போது நினைத்தாராம். கவர்ச்சி நடிகையாக இருந்தாலும், அன்புக்காக ஏங்கிய ஒரு நல்ல பெண்காகவே சில்க் இருந்தார்.
இதன் காரணமாக சில்க் ஸ்மிதா பலரிடம் பேசுவதை தவிர்த்தும், யாரிடமும் பேசாமல் தனக்கான தனி ஒரு குறுகிய வட்டாரத்தில் வாழ்ந்தார். இதனால் சிலர் இவரை திமிரு பிடித்த நடிகை என்றெல்லாம் இவர் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டே சென்றார்கள்.
அந்த வகையில் சில்க் ஸ்மிதாவை திருமணம் செய்ய வாரிசு நடிகரின் மகன் சிறு வயதிலேயே ஆசைப்பட்ட சம்பவம் தமிழ் சினிமாவில் அரங்கேறியுள்ளது. இதனிடையே இயக்குனர் வினு சக்ரவர்த்தியின் வண்டிச்சக்கரம் படத்தின் மூலமாக நடிகை சில்க் ஸ்மிதா கவர்ச்சி நாயகியாக அறிமுகமானார்.
நடிகை சில்க் ஸ்மிதாவின் அடுத்த திரைப்படமான அலைகள் ஓய்வதில்லை படத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்தார். இதில் சில்க் ஸ்மிதாவின் நடிப்பை பார்த்த இயக்குனர் மற்றும் நடிகர் மற்றும் பாடகரான கங்கை அமரன், பிரபுவின் நடிப்பில் உருவான கோழிக் கூவுது படத்தில் சில்க் ஸ்மிதாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார்.
அப்போது கோழிக் கூவுது அந்த படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்ற சமயத்தில், நடிகை சில்க் ஸ்மிதா அவ்வப்போது போனில் கங்கை அமரனை அழைத்து அவரது வீட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்து இருந்ததாகவும், கங்கை அமரனின் வீட்டுக்கு வந்து அவரது மனைவியுடன் இணைந்து சமையல் எல்லாம் செய்து சில்க் ஸ்மிதா அசத்தியதாகவும், அப்போது கங்கை அமரனின் இளைய மகனான பிரேம்ஜி, சிறு வயது பிள்ளையாக இருந்த போதிலும், சில்க் ஸ்மிதாவை வளர்ந்தவுடன் நான் தான் திருமணம் செய்துகொள்வேன் என அடம்பிடிப்பாராம்.
அந்த அளவிற்கு சில்க் ஸ்மிதா தன் குடும்பத்துடன் நெருங்கி பழகி வந்தவர் என கங்கை அமரன் ஒரு பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் சில்க் ஸ்மிதா மருத்துவமனையில் அனாதை பிணமாக உள்ளதை கேட்டவுடன் தன்னால் வேதனை தாங்க முடியாமல் கிட்டத்தட்ட 10 நாட்கள் வரை உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கங்கை அமரன் கூறியுள்ளார்.