11 வருடத்திற்கு முன் “துப்பாக்கி” படத்தில் கைநழுவி சென்ற வாய்ப்பு: தளபதி 67-ல் விட்டதைப் பிடித்த பிரபல நடிகை..!
Author: Vignesh31 January 2023, 8:30 pm
வாமனன் படம் மூலம் அறிமுகமாகி, எதிர்நீச்சல் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த். இவர் கடைசியாக துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார்.

ஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம். ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை அதே சமயம் இது உண்மை தான் என்று சொல்லவில்லை.

தற்போது எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம். இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம்.

மேலும் 35 வயதாகும் இவர், உடம்பு எல்லாம் குறைத்து இளமை பூத்து குலுங்குது.. என்பது சமீபத்திய வீடியோ தான் சாட்சி என்று கூறி வருகிறார்கள்.
முன்னதாக நடிகை பிரியா ஆனந்த் ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டியது இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு காஜல் அகர்வாலுக்கு சென்றுவிட்டதாம். அதன்பின் இப்போதுதான் மறுபடியும் நடிகை பிரியா ஆனந்த் தளபதி 67 படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறாராம்.
இந்த விஷயத்தை தளபதி 67 படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தற்போது சோசியல் மீடியாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிட்டுள்ளார். பிரியா ஆனந்துக்கு 11 வருடத்திற்கு முன் கைநழுவி சென்ற வாய்ப்பு தற்போது மீண்டும் கிடைத்திருப்பதால் பெரும் சந்தோஷத்தில் இருக்கிறாராம். இவர் மட்டுமல்ல இந்த படத்தில் திரிஷாவும் நடிக்கிறார்.
தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு