அயலி WEB SERIESல நடித்த நடிகை இந்த பிரபலத்தின் மகளா : நடிப்புல அம்மாவையே மிஞ்சிருவாங்க!!
Author: Udayachandran RadhaKrishnan11 February 2023, 8:32 pm
சமீபத்தில் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியான வெப் சீரியஸ் தான் அயலி. 4.30 மணி நேரம் 8 எபிசோடுகள் ஒரே மூச்சில் பார்க்க வைத்து விடுவதிலேயே அயலி பாஸ் ஆகிவிட்டேதே என்று சொல்லலாம்.
500 வருஷ பழமையான அயலி தெய்வத்தை டைட்டிலாக வைத்தது மட்டுமின்றி கிளைமேக்ஸிலும் கொண்டு வந்து நிறுத்தியது இயக்குநர் முத்துக்குமாரின் கெட்டிக்காரத்தனம் என்று தான் சொல்ல வேண்டும்.
வயசுக்கு வந்துவிட்டால் படிப்பை நிறுத்தி திருமணம் செய்து வைத்துவிடும் ஒரு ஊரில் வயதுக்கு வந்ததையே மறைத்து டாக்டருக்கு படிக்க போராடும் பெண்ணாக அபி நக்ஷத்ரா ஒவ்வொரு காட்சிகளிலும் போல்டாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் தமிழ் செல்வியாக நடிகை அபி நட்சத்திரா நடித்திருப்பார். சிறுமியாக நடித்துள்ள அபி நக்ஷத்ராவின் தோழி ஒருத்தி வயதுக்கு வருவது அதன் பின்னர் அவள் படும் அவஸ்த்தை. படிப்பை நிறுத்துதல் உள்ளிட்டவற்ற பார்த்து வளரும் தமிழ்ச்செல்விக்கு 10ம் வகுப்புக்கு கூட போகாத ஊரில் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்கிற ஆசை முளைக்கிறது.
பின்னர் அவர் எப்படி தன் ஆசையை நிறைவேற்றுகிறார் என்பதை கதைக்களமாக கூறியிருப்பர். மகளின் நிலை தெரிந்ததும் உதவும் அம்மா அனுமோல் சிலிர்க்க வைக்கிறார். கிராமத்தில் உள்ள அத்தனை கதாபாத்திரங்களும் தேர்ந்தெடுத்து முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வைத்திருப்பதை பார்த்தாலே நிறைவாக உள்ளது.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர், லவ்லின்.
தமிழ்செல்வியின் தோழியாக வலம் வரும் லவ்லின், மைதிலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். நடிப்பபை விட மிரட்டியிருப்பார் என்றே சொல்லலாம்.
லவ்லின் வேறு யாருமில்லை, நடிகை விஜி சந்திரசேகரின் மகள் என்பது கூடுதல் தகவல். விஜி ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் மிகவும் தைரியமாக நடிக்கக்கூடியவர்.
2012ல் வெளியான ஆரோஹனம் படத்தில் வேற லெவல் நடிப்பை வெளிப்படுதிய அவர், தொடர்ந்து பல படக்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக வெற்றி வேல் படத்தில் நெகட்டிவ் ரோலில் அசத்தியிருப்பார்.
அவர் மகளான நடிகை லல்வின், ஹவுஸ் ஓனர் படம் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் கதாநாயகியின் சிறு வயது வேடம் என்பதால் பெரிதாக மனதில் பதியாவிட்டாலும், மருத படத்தில் விஜி தாயாகவும், லவ்லின் மகளாகவும் நடித்து அசத்தியிருப்பார். ஆனால் படம் நேராக சன்டிவியில் வெளியானது.
தற்போது அயலி வெப் சீரியஸில் அம்மாவின் நடிப்பையே மிஞ்சியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.