என் வாழ்க்கை இப்படி இருக்க வடிவேலு தான் காரணம்..- பல உண்மைகளை புட்டு புட்டு வைத்த நடிகை..!

Author: Vignesh
26 April 2023, 3:00 pm

தமிழ் சினிமாவில் பல வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வரும் நடிகர் தான் வைகை புயல் வடிவேலு.

இதனிடையே, நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் தொடர்ச்சியாக பல திரைப்படங்களை கைப்பற்றி விடுவதற்கு முக்கிய காரணம் வடிவேலு நடிப்பு வராத நடிகர்கள், மற்றும் நடிகைகளையும் நடிக்க வைத்து தனது திரைப்படத்தில் மிகவும் பிரம்மாண்டமாக காட்டி விடுவாரார் என நடிகை பிரியங்கா தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

priyanka-updatenews360

நடிகை பிரியங்கா காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் ஒரு வாய் பேச இயலாத பெண்ணாக நடித்த அந்த திரைப்படத்தில் நடிகர் வடிவேலு பேருந்தில் ஏறி அனைத்து பெண்களுக்கும் காதல் கடிதம் கொடுக்கும் காமெடி மக்களால் தற்பொழுது வரை மறக்க முடியாது என்றுதான் கூறப்படுகிறது.

priyanka-updatenews360

சினிமாவிற்காக நடிகை பிரியங்கா தனது நிஜமான பெயரை மாற்றி அமைத்துள்ளார். இவரது உண்மையான பெயர் சந்திரலேகா என இவர் தெரிவித்து உள்ளார். நடிகை பிரியங்கா மருதமலை திரைப்படத்தில் நடிகர் வடிவேல் காவல்துறை அதிகாரியாக நடித்து கொண்டிருக்கும் பொழுது எனக்கு ஐந்து புருஷன் என ஒரு காமெடி வரும் அந்த காமெடியை நினைத்துப் பார்த்தாலே சிரிப்பு தான் வரும்.

priyanka-updatenews360

மேலும், இவ்வாறு புகழ்பெற்று விளங்கி வந்த நடிகை பிரியங்கா தற்போது ஒரு சில திரைப்படங்களையும் கைப்பற்றி நடித்து வருகிறார். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த என்னை நடிகர் வடிவேலு சார் தான் பிரபலமாக்கி விட்டார் எனவும் அவர் கூறியுள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!