“தங்கலான்” Release’ல் பெரிய பிரச்சனை… நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

Author:
12 August 2024, 4:33 pm

வித்தியாசமான கதை களத்தில் திரைப்படங்களை இயக்கி மாபெரும் வெற்றி கொடுப்பவர் தான் இயக்குனர் பா ரஞ்சித். இவரது இயக்கத்தில் அதிரடியான நாடகத் திரைப்படமாக உருவாகி வரும் படம் தான் “தங்கலான்” இந்த திரைப்படத்தில். விக்ரம் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக மாளவிகா மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

இவர்களுடன் பார்வதி மேனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நடிகர் விக்ரமின் 61வதுதிரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ரூ. 150 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படம். வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகியுள்ளது .

இப்படியான நேரத்தில் தங்கலான் ரிலீசுக்கு ஒரு சிக்கல் வந்திருக்கிறது. அதாவது, அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வாங்கிய கடனில் இன்னும் ரூபாய் 10.35 கோடி திரும்ப செலுத்தவில்லையாம். இது தொடர்பாக சென்னை நீதிமன்றத்தில் ஒரு உத்தரவு பிறப்பு இருக்கிறது.

தங்கலான் ரிலீஸ் க்கு முன் ரூ. கோடி கட்ட வேண்டும் என்றும் அதன் பிறகு ரிலீஸ் செய்து கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் ஸ்டுடியோ கிரீன் மற்றொரு படமான கங்குவா ரிலீஸ் முன்பும் ஒரு கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்று அதிரடியாக நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதனால் தங்கலான் திரைப்படம் ரிலீசுக்கு முன்னர் இப்படி ஒரு சிக்கலில் சிக்கி இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார்கள்.

  • Anirudh updates on Vidamuyarchiஅனிருத் வெளியிட்ட “விடாமுயற்சி” மாஸ் அப்டேட்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
  • Views: - 293

    0

    0