சீரியல் நடிகை ஆல்யா மானசாவுக்கு பையன் பிறந்துருக்கு.. பேர் கூட வெச்சாச்சு..!!
Author: Rajesh27 March 2022, 10:29 am
ராஜா ராணி தொடர்மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஆலியா மானசா. அந்த தொடரில் நடித்த அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவும் அவரும் காதலர்களாக மாறியதும், பொது இடங்களில் இருவரும் நெருக்கமாக வலம் வரும் புகைப்படங்களும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சஞ்சீவுக்கு முன் சதீஷ் மானஸ் என்பவரை மானசா காதலித்தது உலகறிந்தது.
காலப்போக்கில், ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ்விற்கு விஜய் டிவியே பிரம்மாண்டமாக திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்தது. மேலும், இவர்கள் நடித்து வரும் ராஜா ராணி சீரியலை விட இவர்கள் வெளியில் செய்யும் ரொமான்ஸ் தான் அதிகம் இருந்தது.
பின்னர், 2019 ஆம் வருடம் மே மாதத்தில் யாருக்கும் தெரியாமல் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்தனர்.

இவர்கள் இருவருக்கும் அய்லா எனும் அழகிய பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த பிறகு மீண்டும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளளார் ஆல்யா மானசா.
தற்போது ஆல்யா மானசாவின் கணவர் சஞ்சீவ் சன் டிவியில் புதிய தொடரான கயல் சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் தனது மனைவி ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதாக அவரது கணவர் இன்ஸ்டா லைவில் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது நடித்து வரும் ராஜா-ராணி 2 சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்பது கூடுதல் தகவல்.
இந்நிலையில், இன்று ஆல்யா மானசாக்கு பையன் பிறந்துருக்கு, பேர் கூட வெச்சாச்சு அவரின் பெயர் ARSH. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.