2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு, அஜித்குமாரின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.
இரு படங்களுமே ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளதால், எந்த படம் வெற்றி பெரும் என்பதைத் தாண்டி, எந்த படத்தை எந்த படம் வீழ்த்தும் என்றே இரு நடிகர்களின் ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த டிசம்பர் 31ஆம் தேதி துணிவு படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியான துணிவு ட்ரெய்லர், கலவையான விமர்சனங்களைப் பெற்று, யூடியூபில் அதிகமான பார்வைகளைக் குவித்து வந்தது.
மேலும் யூடியூப் ட்ரெண்டிங்கிலும் முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில், விஜய்யின் வாரிசு பட ட்ரெய்லர் நேற்று வெளியானது. குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக, செண்டிமெண்ட், ஆக்ஷன், காதல் என கலவையான காட்சிகளுடன் வெளியான இந்த ட்ரெய்லரும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனிடையே, வெளியான 24 மணி நேரத்தில் அதிகமான பார்வைகளைப் பெறும் போட்டியில், துணிவு பட ட்ரெய்லர் வெற்றி பெற்றுள்ளது.
வெளியான 24 மணி நேரத்தில் வாரிசு படத்தின் ட்ரெய்லர் 2.3 கோடி பார்வைகளைக் கடந்திருக்கும் நிலையில், துணிவு படத்தின் ட்ரெய்லர் 2.5 கோடி பார்வைகளைக் கடந்திருந்தது.
வாரிசு பட தமிழ் மற்றும் தெலுங்கு டிரெய்லர் ஒட்டு மொத்தமாக 3.2 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளதும், யூடியூப் ட்ரெண்டிங்கில் துணிவு படத்தை பின்னுக்குத் தள்ளி வாரிசு பட ட்ரெய்லர் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளதும், வெளியான ஒரு மணி நேரத்தில் அதிகமான பார்வைகளைப் பெறும் போட்டியில் வாரிசு படமே வெற்றி பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.