நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் ‘துணிவு’.பொங்கலை முன்னிட்டு இன்று (11.01.2023) துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதிகாலை 1 மணிக்கு துணிவு படத்தின் முதல் காட்சி தமிழகமெங்கும் திரையிட்டனர்.
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. அத்தோடு இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
அத்தோடு இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார், இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.
அத்தோடு நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இவ்வாறுஇருக்கையில் இன்று துணிவு படத்துடன் வெளியான வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், “இந்த பண்டிகை காலத்தில் கிளாசிக் உருவாக்கமான துணிவு படத்தினை கண்டு மகிழுங்கள்.
துணிவு படக்குழுவுக்கு வாழ்த்துகள். துணிவே துணை” என சரத்குமார் ட்வீட் செய்துள்ளார். அத்தோடு இந்த ட்வீட் ட்விட்டரில் 3.71 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று…
நடிகை அமலாபால் மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து விஜய்,…
டாப் நடிகர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆமிர்கான். இவர் தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் உதவி இயக்குனராகவும் தனது…
எம்புரானுக்கு வந்த வம்புகள் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான “L2 எம்புரான்”…
தற்போதைய கால சூழலில் சிறு வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவது சகஜமாக மாறி வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் வெளியில் சென்றிருக்கும்…
பிக்பாஸ் தர்ஷன் திடீர் கைது… பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். இலங்கையை…
This website uses cookies.