நான் கேக்கற பணத்த கொடுப்பானா? இளையராஜாவை ஒருமையில் திட்டிய பிரபலம்!!
Author: Udayachandran RadhaKrishnan22 February 2023, 2:45 pm
தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்ற பங்கு இளையராஜாவுக்கு உண்டு. அவர் அமைத்த பாடல்கள் உலகத்தையே ரீங்காரமிடச் செய்தது என்று கூறினால் அது மிகையல்ல.அவருடைய இசையில் பாடத் தவம் கிடந்த எத்தனேயோ பாடகர்கள் உள்ளனர். அவர் அறிமுகம் செய்த எத்தனையோ பாடகர்களும் உள்ளனர்.
இளையராஜாவுக்கு ஓவியம் என்றால் பிடிக்கும், குறிப்பாக பிரபல ஓவியரான சிற்பியின் ஓவியங்கள் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்குமாம்.

ஒரு முறை தனது இஷ்ட தெய்வமான அன்னை மூகாம்பிகையை ஓவிய சிற்பியின் கை வண்ணத்தில் வரைய வைக்க இளையராஜா ஆசைப்பட்டுள்ளார்.
அதற்காக தனது உதவியாளரை அழைத்து தனக்கு மூகாம்பிகை ஓவியத்தை வரைந்து கொடுக்க முடியுமா எனவும் எவ்வளவு தொகை எனவும் சிற்பியிடம் கேட்டு வரும் படி கூறியுள்ளார்.
உதவியாளரும் ஓவியர் சிற்பியை சந்தித்து நடந்ததை கூறியுள்ளார். பின்னர் இளையராஜாவிடம் மீண்டும் வந்த உதவியாளர், அந்த ஓவியர் சுத்தம் விவரம் இல்லாத ஆளு, அவர் ஓவியம் வரைய அதிக தொகை கேட்கிறார், அப்படி என்ன அற்புதமான ஓவியத்தை வரைந்துவிட போகிறார், அவரு பேசற விதமே சரியலில் நான் கேட்கிற பணத்தை இளையராஜா கொடுப்பானா என கேட்கிறார், இப்படியெல்லா உங்களை பேசுறாரு, அவரு வேண்டாம் நாம வேற யாராவது பாத்துக்கலாம் என கூறியிருக்கிறார்.
உடனே இளையராஜா, நீ திரும்பவும் சிற்பி வீட்டுக்கு போ அவர் என்ன தொகை கேட்கிறாரோ அதை கொடுத்துவிடுவதாக சொல் என கூறியுள்ளார்.
உடனே உதவியாளர், அவர் சொன்ன தொகைக்கு எல்லாம் ஒத்துக்க வேண்டாம் நான் பேசி பாதி தொகைக்கு முடிச்சு தரேன் என கூற, கடுப்பான இளையராஜா உன்னை நான் அப்படி பேசி முடிக்க சொன்னேனா, அவருடைய ஓவியத்திற்கு விலை நிர்ணயம் செய்ய நீயும் நானும் யாரு? அவருகிட்ட போய் என்ன தொகைனு கேளு நான் கொடுக்கறேன் என கூறியுள்ளார்.
உடனே சிற்பியும் ஓவியம் மிகச்சிறப்பாக வரைந்து தர, பின்னர் இளையராஜாவும் சிற்பியும் சிறந்த நண்பர்கள் ஆனார்கள், இன்று வரை ஓவியர் சிற்பி வரைந்த மூகாம்பிகையின் ஓவியம்தான் இளையராஜா பூஜை அறையில் இருக்கிறது,.