43 வயதில் ரகசியமாக திருமணம் செய்த பிரபலம்… உண்மையை ஊர் அறிய செய்த காதல் மனைவி?!!

Author: Udayachandran RadhaKrishnan
23 January 2023, 4:32 pm

திருமணமே செய்யாமல் இருந்த பிரபல நடிகர் தனது 43 வயதில் ரகசிய திருமணம் செய்த காதல் மனைவி ஊர் அறிய தண்டோரா அடித்துள்ளார்.

பிரபல நடிகரான பிரேம்ஜியும் பாடகி வினைட்டாவும் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்துள்ள போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஷாக்காகியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் பிரேம்ஜி. 1980 மற்றும் 90களில் பிரபல இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என ஆல் ரவுண்டராக வலம் வந்த கங்கை அமரனின் இளைய மகன் ஆவார்.

பிரேம்ஜியின் அண்ணன் பிரபல இயக்குநரான வெங்கட் பிரபு ஆவார். வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து படங்களிலும் நிச்சயம் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தை பெற்று விடுவார் நடிகர் பிரேம்ஜி.

நடிகர் பிரேம்ஜி, நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார் பிரேம்ஜி.

கடைசியாக மன்மத லீலை என்ற படத்திற்கு இசையமைத்தார். மன்மத லீலை படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்தார் பிரேம்ஜி. 43 வயதான பிரேம்ஜிக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் தான் ஒரு முரட்டு சிங்கிள் என அடிக்கடி பதிவிட்டு வருகிறார் பிரேம்ஜி.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் பிரேம்ஜியும் பாடகி வினைட்டாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியானது. இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இருவரும் காதலிக்கிறீர்களா என கேட்டு வந்தனர். ஆனால் வினைட்டா தங்களுக்குள் இருப்பது வெறும் நட்பு மட்டும்தான் என கூறி மறுத்து வந்தார். இதையடுத்து இருவரும் தங்களின் வேலையில் கவனம் செலுத்தி வந்தனர்.

இந்நிலையில் வினைட்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் நடிகர் பிரேம்ஜியை கட்டியணைத்தப்படி உள்ள வினைட்டா மீண்டும் என் புருஷனுடன் சேர்ந்துவிட்டேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவுக்கு பின்னணயில் என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் என்ற பாடலையும் ஒலிக்கவிட்டுள்ளார். இதே பதிவை நடிகர் பிரேம்ஜியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

இருவரும் ஷேர் செய்துள்ள இந்த பதிவுகளை பார்த்துள்ள நெட்டிசன்கள், இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் இனிமே நீங்க முரட்டு சிங்கிள் இல்லையா புரோ என்றும் ரசிகர்கள் பிரேம்ஜியிடம் கேட்டு வருகின்றனர். ஏற்கனவே பலமுறை இருவரும் காதலிக்கிறார்களா என கிசுகிசுக்கள் பரவி வந்த நிலையில் பிரேம்ஜியை புருஷன் என பதிவிட்டு பாடகி வினைட்டா ஷேர் செய்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 637

    1

    4