ஆளும் புதுசு… ஆட்டமும் புதுசு: ஆனால் Contestants….? அதிருப்தியில் ஆடியன்ஸ்!

Author:
7 October 2024, 3:05 pm

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று ரசிகர்கள் எதிர்பார்த்து பார்க்கக் கூடிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக மாறியது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து கண்டு களிக்கும் இந்த நிகழ்ச்சி சர்ச்சைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் குறைவில்லாத வகையில் அனைத்தும் கலைந்த கலவையாக ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்து ஈர்த்துள்ளது.

இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்து இருக்கிற நிலையில் தற்போது 8வது சீசன் துவங்கியிருக்கிறது. இதுவரை கமல்ஹாசன் தான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வந்தார். 7 சீசன்களை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியேற போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.

bigg boss 8

அதை அடுத்து இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விஜய் சேதுபதி கமிட் செய்யப்பட்டார். தற்போது விஜய் சேதுபதி வைத்து இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதியின் ஸ்டைல் மக்களுக்கு ஓரளவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பிடித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பெரிதாக எதிர்பார்த்த வகையில் யாரும் இல்லை.

ஏனென்றால் இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் விஜய் டிவி சார்ந்த பிரபலங்களே போட்டியாளர்களாக பங்கேற்றிருக்கிறார்கள். இது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தி தந்துள்ளது. திறமையுள்ள பல கலைஞர்கள் அடிமட்டத்திற்கு சென்று கொண்டிருக்கும் சமயத்தில் அவர்களுக்கு பிக் பாஸ் வாய்ப்பு கொடுத்தால் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நேரத்தில் அதை விஜய் டிவி சார்ந்த பிரபலமான நபர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்:சாச்சனாவுக்கு Bigg Boss வீட்டில் நடந்த கொடுமை…? முதல் நாளே வீட்டை விட்டு வெளியேறி அதிர்ச்சி!

bigg-boss-8-1

இதுவே பெரும் சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது. இதனால் விஜய் டிவி ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இனி வரும் நாட்களில் விஜய் சேதுபதி எப்படி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்? எப்படி போட்டியாளர்களின் பிரச்சனையை சமாளித்து நியாயத்துடன் சரி செய்கிறார் என்பதை பொறுத்து அவரது உண்மை குணமும் மக்களுக்குப் தெரிய வரும் என்பது கூடுதல் தகவல்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 284

    0

    0