சூனியம் வைத்த ஜோதிடர்கள் – மாரிமுத்துவின் மரணத்திற்கு காரணம் இது தான் ? தீயாய் பரவும் வீடியோ!

Author: Shree
8 September 2023, 3:47 pm

பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து சமீப நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணம் பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. நடிகர், இயக்குநர் மாரிமுத்து (57) ‘எதிர்நீச்சல்’ தொடர் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். பல படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

அடுத்ததாக கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சீரியல் ஒன்றிக்காக டப்பிங் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தானாகவே காரை ஓட்டிச்சென்று வடபழனி சூர்யா மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் கூறுகிறது.

இதையடுத்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், இன்று மாலை, அவரது சொந்த ஊரான தேனிக்கு உடல் கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் மாரிமுத்துவின் மரணத்திற்கு கரணம் ஜோதிடர்களின் சாபம் தான் என சமூகவலைத்தளங்களில் பலர் பேசி வருகிறார்.

அதற்கு காரணம் என்னவென்றால் சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழா தமிழா நிகழ்ச்சியில், ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள் VS சந்தேகம் எழுப்பும் பொதுமக்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட மாரிமுத்து, ஜோஷியர்கள் சொல்வது எதுவுமே நடக்கவில்லை. எதையும் அவர்கள் முன்கூட்டி சொல்வேதே கிடையாது. 2004ல் சுனாமி வரும்னு எந்த ஜோஷியனாவது சொன்னானா? எந்த ஜோஷியனாவது 2015ல் சென்னை வெள்ளத்தில் மூழ்கும்னு சொன்னானா? எந்த ஜோஷியாவானது கொரோனா வரும்னு முன்னாடியே சொன்னா? இல்லை…, வந்த பிறகு தான் அவன் அவன் கதை உருட்டுறான்.

குறிப்பாக, மாண்புமிகு தமிழக முதலமைச்சர், முதலமைச்சர் ஆகவே முடியாது என்று பல ஜோதிடர்கள் சொன்னார்களே இப்போ அந்த ஜோதிடர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? ரஜினிகாந்த் பிறந்த அதே நிமிஷத்தில் 57 ஆயிரம் குழந்தைகள் பிறந்திருக்கு. ஆனால் ரஜினி மட்டும் எப்படி சூப்பர் ஸ்டார் ஆனாரு. இதை யாராச்சும் கேட்டீங்களா? என கேட்டு அரங்கத்தையே அதிரவைத்தார். அப்போது குறுக்கிட்ட ஓரிரு ஜோசியர், ” நான் சொல்வது நடக்கலைன்னா ரூ.2 கோடி சொத்து எழுதி தரேன் ஒருவேளை நடந்துவிட்டால் நீங்க எழுதி தரீங்களா? என கேட்க அங்கிருந்த அனைவரும் குலுங்க குலுங்க சிரித்துவிட்டார். சில நாட்களுக்கு முன்னர் வெளியான இந்த எபிசோடை நெட்டிசன்ஸ் மீம்ஸ் போட்டு தள்ளினர்.

இந்த நிகழ்ச்சியில் மாரிமுத்து ஜோதிடர்களை மிகவும் இழிவாக பேசியதாக கூறி அனைத்து ஜோதிடர்களும் ஒன்று சேர்ந்து அவர் மீது போலீசில் புகார் கொடுத்தனர். எனவே மாரிமுத்து ஜோதிடர்களையும் ஜோதிடத்தையும் பற்றி இழிவாக பேசியதால் அவர்களின் சாபம் தான் இவரை சாகடித்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் பேசி வருகிறார்கள். மனிதனாக பிறந்த யாராக இருந்தாலும் ஒரு நாள் மரணிக்க தான் வேண்டும் அது ஜோஷியனாக இருந்தாலும் சரி அப்படி இருக்கும்போது ஏன் இப்படி மூடத்தனமா பேசுறாங்கனு தெரியல என பலர் தெளிவாக இருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=TidFQoAz0kQ
  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!