அனிகாவுக்கே Tough கொடுக்க வரும் பிரபல நடிகையின் மகள் : அழகில் அம்மாவையே மிஞ்சிட்டாங்க!!
Author: Udayachandran RadhaKrishnan27 January 2022, 2:27 pm
நடிகை மீனா அவர்கள், தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’s – இல் ரவுண்டு காட்டி அடித்தார். இவர் ரஜினி, கமல், அஜித் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் இடம்பெறும் ஒரு குத்து பாடலில் நடனமாடி உள்ளார்.
இந்த நிலையில், இவரின் Latest Video ஒன்று அனைவரையும் மூக்கின் மீது விரல் வைக்கும் படி இருக்கிறது. அந்த அளவிற்கு மிகவும் ஸ்லிம்மாக இன்றைய ஹீரோயின்களுக்கு சவால் விடும் படி தெரிகிறார் நடிகை மீனா.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சூப்பர்ஹிட் முத்துவுக்கு பிறகு 24 ஆண்டுகளுக்குப் பின் நடிகை மீனா ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த படத்தில் நடித்தார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் போட்டோக்களை பதிவிடும் மீனா, தனது மகள் நைனிகாவுடன் எடுத்த போட்டோ வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் தனது மகள் நைனிகாவுடன் எடுத்த போட்டோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். தாயை விட அழகில் மிஞ்சம் மகள் என்றும், இனி ஹீரோயினாக நடிக்க வாய்புள்ளது என விமர்சித்து வருகின்றனர்.