தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.
70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. இப்படி ஒரு அந்தஸ்தில் உள்ள இவரை செருப்பால் அடிப்பேன் என இயக்குனர் ஒருவர் கூறியது குறித்த ஷாக்கிங் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.
தற்போது, ஜெயிலர் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் ரஜினி, பிரபல இயக்குனரிடம் திட்டு வாங்கியது குறித்து மனம் திறந்து பகிர்ந்தது இணையதளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. 1970களில் பாலச்சந்தர் இயக்கத்தில் நடித்து வந்த ரஜினி தன் படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பி உள்ளார்.
மது அருந்திவிட்டு ஓய்வெடுத்த வந்த ரஜினியை படப்பிடிப்பிற்கு மீண்டும் அழைத்துள்ளார் பாலச்சந்தர். அப்போது செய்வதறியாது இருந்த ரஜினி, மது அருந்தியதை மறைக்க, தன்னை தயார்படுத்தி கொண்டு படப்பிடிப்பிற்கு சென்றாராம். ஆனால், இயக்குனர் பாலச்சந்தர் மது அருந்தியதை கண்டுபிடித்து விட்டாராம்.
அதன்பின் உனக்கு நாகேஷ் பற்றி தெரியுமா எனக் கேட்டாராம். நீ எல்லாம் அவர் நடிப்பிற்கு முன் ஒன்னுமே இல்ல. அவர் மது பழக்கத்திற்கு ஆளாகி வீணாகியது போல, நீயும் ஆக போகிறாயா? இனி நான் உன்னை இப்படி பார்த்தால் செருப்பால் அடிப்பேன் என கூறியுள்ளார். அதன் பின்ரே, எந்த ஒரு படப்பிடிப்பிற்கும் மது அருந்து விட்டு செல்லக்கூடாது என்ற முடிவிற்கு வந்தாராம் ரஜினி.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.