விஜய் காலில் விழுந்த இயக்குநர் : வாழ்க்கை ஒரு வட்டம்னு 8 வருடத்திற்கு பின் ஒப்புக்கொண்ட பிரபலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 November 2022, 6:06 pm

தற்போது உள்ள காலக்கட்டத்தில் பல வருடங்களாக சினிமாவில் இருக்கும் நடிகர்களுக்கே கிடைக்காத வரவேற்பு ஒரு அறிமுக நாயகனுக்கு கிடைத்து விடுகிறது.

அதற்கு ஒரு உதாரணம் தான் தற்போது வெளியான லவ் டுடே படத்தின் இயக்குநர், நடிகர் பிரதீப். கோமாளி படத்தின் மூலம் அறிமுக இயக்குநராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

அந்த படமும் நல்ல விமர்சனங்களை பெற்றது. காரணம் வித்தியாசமான கதை, வேடிக்கையாக படத்தை கொண்டு போய் மக்களிடம் சேர்த்துள்ளார்.

அதைத்தொடர்ந்து தற்போது வெளிவந்த படம் லவ் டுடே… இந்த படத்தின் பெயர் ஏற்கனவே விஜய், சுவலட்சுமி நடிப்பில் வந்த படம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

தற்போது வெளியாகியுள்ள லவ்டுடே படத்தின் டைட்டில் கார்டில் விஜய்க்கு நன்றியும் பிரதீப் தெரிவித்திருப்பார். ஆனால் இயக்குநர் பிரதீப் கடந்த 2014ஆம் ஆண்டு விஜய்யை கேலி செய்யும் விதமாக ஒருது சில பதிவுகளை போட்டிருந்தார்.

அதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் வெளியான லிங்கா படத்திற்கு முதல் மூன்று நாட்களுக்கு டிக்கெட்டே கிடைக்கவில்லை. விஜய்யின் கத்தி படத்திற்கு எளிதாக டிக்கெட் கிடைத்துவிடுகிறது என கேலி செய்தார்.

மேலம் படத்தின் டப்பிங் சுறா படத்தின் டப்பிங்கை விட மோசமாக உள்தாகவும் விமர்சித்திருந்தார். ஆனால் தற்போதை நிலை, விஜய்யிடம் டைட்டில்லை கேட்டு பெற வேண்டிய நிலை.

இதை விஜய் ரசிகர்கள், வாழ்க்கை ஒரு வட்டம்தான் என்று பிரதீப்பை விமர்சித்து வருகின்றனர். இதில் இன்னொரு தகவல் என்னவென்றால் விஜய்க்காக, பிரதீப் கதை ரெடி செய்துள்ளாராம். கூடிய விரைவில் படம் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!