130 ரூபாய் பணத்தை திருடி அரை டவுசருடன் சென்னைக்கு வந்து பிளாட்பாரத்தில் தூங்கிய இயக்குநர் : தூக்கிய போலீசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2023, 8:16 pm

சினிமா கனவுகளோடு சென்னைக்கு நுழைந்த எத்தனையோ பேர், ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு, கடின உழைப்புக்கு பின் வெற்றி வாகை சூடியுள்ளனர்.

அதிலும், தமிழ் சினிமாவில் தற்போது இயக்குனராக அறிமுகமாகி அதன்பின் நடிக்க ஆர்வம் கொண்டு நடிப்பவர்களும் சிலர் இருக்கிறார்கள். அப்படி ஒரு இடத்தினை செய்து வருகிறார் இயக்குனர் சமுத்திரகனி.

ஆரம்பத்தில் இயக்குனர் பாலச்சந்தரின் சீரியலில் இயக்க வாய்ப்பு பெற்று அதன்பின் படங்களை இயக்க ஆரம்பித்தார். படங்கள் எதுவும் ஓடவில்லை என்பதால் மீண்டும் சீரியலை இயக்கச்சென்றார்.

அப்படி சசிகுமாரின் சுப்ரமணியபுரம் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க ஆரம்பித்து பின் இயக்கும் வாய்ப்பு பெற்று தற்போது நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் ஆரம்பகால சினிமாவில் பட்டக்கஷ்டத்தை பகிர்ந்துள்ளார்.

சினிமா ஆசையால் என்னுடைய அப்பாவின் 130 ரூபாய் பணத்தை திருடி சென்னைக்கு அரை டிரெளசருடன் எங்கு செல்வது கூட தெரியாமல் வந்தேன். அப்போது ஜெமினி பாலத்திற்கு கீழ் இருக்கும் பிளாட்பாரத்தில் தூங்கினேன்.

அப்போது ஒரு போலிஸ் அதிகாரி என்னை எழுப்பி, இங்கெல்லாம் தூங்க கூடாது என கூறி ஸ்டேஷனுக்கு கூட்டிச்சென்றார். அங்கு எனக்கு செய்திதாளை விரித்து அங்கு படுக்க சொன்னார். அதன்பின் காலை டீ வாங்கி கொடுக்க நானும் சினிமா பற்றிய ஆசையை கூறினேன்.

அதற்கு அந்த போலிஸ், இப்போது நீ சினிமாவில் நுழைய முடியாது, வீட்டிக்கே போ என்று கூறினார். அதற்கு நான் தி நகருக்கு எப்படி செல்லவேண்டும் என்று மட்டும் கேட்டு அங்கு சென்றேன் என தெரிவித்தார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ