விவாகரத்தை மறைக்க தான் அரசியல் என்ட்ரி… லெப்ட் அன்ட் ரைட் வாங்கிய விஜய்யின் மகன்!

Author: Shree
3 July 2023, 6:38 pm

சினிமாவில் என்னதான் பெரிய ஹீரோவாக இருந்தாலும் விமர்சனங்கள், சர்ச்சைகள், கேலி , கிண்டல் என பல சிக்கல் வரும் அதையெல்லாம் தாண்டி தொடர்ந்து மக்களுக்கு தான் நல்லவர் என்பதை படத்தின் மூலமாகவும், நேரடியாகவும் நிரூபித்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்படி செய்தால் தான் இந்த துறையில் நிலைத்து இருக்கமுடியும்.

அப்படிதான் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவான விஜய் என்ன பெரிய சிக்கல்கள், பிரச்சனைகள் வந்தாலும் அதையெல்லாம் கண்டும் காணாமல் தொடர்ந்து நடிப்பில் கவனத்தை செலுத்தி மக்களை கவர்ந்து வைத்திருந்தவர் தற்போது அரசியலில் இறங்கியுள்ளார். அவர் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே நடிகர் விஜய்க்கும் அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் சங்கீதா வெளிநாட்டில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு மகன் மற்றும் மகளுடன் சென்றுவிட்டார் என்றும் தகவல் வெளியாகி சோசியல் மீடியாவை பதம் பார்த்தது.

அதுமட்டுமல்லாமல், நடிகையின் மேல் உள்ள காதல்தான் காரணம் என்றும், அந்த நடிகையுடன் விஜய்க்கு தவறான உறவு உள்ளது என்றும், இதை அறிந்து தான் சங்கீதா சென்று விட்டதாக விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் சர்ச்சைக்குரிய தகவல் பரவியது.

இதற்கெல்லாம் காரணமான விஜய்யின் உதவியாளர் ஜெகதீஷை லெப்ட் அன்ட் ரைட் அடித்து விளாசினாராம் விஜய்யின் மகன் சஞ்சய். இந்த குடும்ப விவகாரங்களை மறைக்கவே தான் தர்மம், அரசியல் என்று வீஜய் திசை திருப்பி வருவதாகவும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!