2 வருடமாக ராஷி கண்ணாவுடன்… சத்தியத்தை கசிய விட்ட பிரபல நடிகர்..!!
Author: Udayachandran RadhaKrishnan25 February 2025, 11:10 am
2 வருடமாக நடிகை ராஷி கண்ணாவுடன் பழகி வருவதாகவும், அவர் சத்தியம் செய்து கொடுத்ததை பிரபல நடிகராக ஓபன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் தவித்த நடிகர் ஜீவாவுக்கு அண்மையில் வெளியான பிளாக் படம் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
இதையும் படியுங்க : திடீரென டிராக்கை மாற்றும் அஜித்.. டென்ஷனான GBU டீம்!
தற்போது பா விஜய் இயக்கத்தில் அகத்தியா படத்தில் ஜீவா, ராஷி கண்ணா, அர்ஜூன், யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். வரும் 28ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழு பங்கெடுத்து வருகிறது. குறிப்பாக அகத்தியா படம் ஃபேன்டசி திரில்லர் படமாக உருவாகியுள்ளதாகவும், கிளைமாக்ஸ் காட்சி வித்தியாசமாக எடுக்கப்பட்டுள்ளதாக கூறினர்.
இந்த படம் குறித்து பேசிய நடிகர் ஜீவா, நானும் ராஷி கண்ணாவும் 2 வருடமாக தொடர்பில் உள்ளோம். அவர் எனக்கு இந்தி பட வாய்ப்புகளை வாங்கித் தருவதாக சத்தியம் செய்துள்ளார் என கூறியுள்ளார்.
என்னடா இது, முன்னணி நடிகராக இருந்த ஜீவா, ராஷி கண்ணாவிடம் வாய்ப்பு கேட்கும் அளவுக்கு மார்க்கெட் சரிந்துவிட்டதா, என்ன இது ஜீவாவுக்கு வந்த சோதனை என நெட்டிசன்கள் கமண்ட் அடித்து வருகின்றனர்.