சத்தமே இல்லாமல் மகளின் திருமணத்தை நடத்தி முடித்த பிரபல நடிகர் : அட அவரோட மகனும் நடிகராச்சே!!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2023, 3:31 pm

சினிமா மூலம் பிரபலமானவர்கள் சிலர், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி வெளியுலகிற்கு தெரியப்படுத்த விரும்பா மாட்டார்கள்.

அப்படி எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும், அதில் சைலண்ட்டாக தனது மகளின் திருமணத்தை முடித்து வைத்துள்ளவர்தான் நடிகர் கருணாஸ்.

நடிகர், பாடகர், இசையமைப்பாளர், அரசியல்வாதி என பன்முகத் திறமை கொண்ட கருணாஸ், நந்தா படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் விஜய், அஜித், ரஜினி, கமல் என அனைத்து தரப்பு நடிகர்களுடன் நடித்து நகைச்சுவை நடிகர் என்ற அந்தஸ்தை பெற்று உயர்ந்தார்.

தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை , குணச்சித்திரம் மற்றும் கதாநாயகன் என பல வேடங்களில் நடித்து வருபவர் கருணாஸ்.

இடையில் அரசியலில் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டார். இவருக்கு கென் என்ற மகனும் டயானா என்ற மகளும் உள்ளனர்.

கென் அசுரன் உள்ளிட்ட படங்களின் மூலம் நடிகராக அறிமுகமானார். பாடகராகவும் வலம் வருகிறார். கருணாஸின் மனைவி கிரேஸ் பாடகி, பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.

கருணாஸ் கிரேஷ் தம்பதிக்கு மகள் உள்ளது பெரும்பாலானோருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். தற்போது அவரது மகள் டயானாவுக்கு திருமணம் நடந்துள்ளது.

இது சம்மந்தமான குடும்ப புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள கென் “அக்கா மற்றும் மாமாவுக்கு திருமண வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!