சினிமாவை பொறுத்தவரை உடன் நடிப்பவர்களுடன் காதல், கல்யாணம், கிசுகிசு என்பது சகஜமான விஷயம் தான், அப்படி பிரபல நடிகர் வெளிப்படுத்திய காதலை ஏற்க மறுத்த நடிகையின் சம்பவத்தை இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.
1986ல் மைதிலி என்னை காதலி படம் மூலம் அறிமுகமானார் நடிகை அமலா. பார்ப்பதற்கு அழகாக மலையாள பெண் போலவே தோற்றமளித்தார். ஆனால் அவர் மலையாளி கிடையாது. வங்காளி தந்தைக்கும், ஐரிஷ் தாய்க்கும் பிறந்தவர்தான் அமலா.
சென்னையில் உள்ள கலாஷேத்ராவில் பைன் ஆர்ட்ஸ் படித்தார், டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான மைதிலி என்னை காதலி படம் மூலம் அறிமுகமானார். படம் பயங்கர ஹிட் தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகள் குவிந்தன.
ரஜினி,கமல் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். ஆனால் அவர் தெலுங்கில் கால் பதித்தவுடன் தமிழ் பக்கம் திரும்பவே இல்லை. அதற்கு காரணமாக இருந்தது பிரபல நடிகர்தான்.
அவர் வேறு யாருமில்லை, நடிகர் ரகுவரன். 1987 இல் ரஜினியுடன் வேலைக்காரன் படத்தில் நடித்ததன் மூலம் அமலா முன்னணி நடிகையானார். வேதம் புதிது, இது ஒரு தொடர்கதை,, கூட்டுப் புழுக்கள், பேசும் படம் ஆகியவை அந்த வருடம் வெளியான படங்களில் சில.
இதில் கூட்டுப் புழுக்கள் படத்தில் ரகுவரன் ஜோடியாக நடித்திருந்தார். கூட்டுக் குடித்தனங்கள் மிகுந்த ஒரு குடியிருப்பை மையப்படுத்தி ஆர்.சி.சக்தி கூட்டுப் புழுக்கள் படத்தை எடுத்திருந்தார். குடும்பத்தில் நிலவும் குழப்பங்கள், பாலியல் வேட்கை, வறுமை, சாதி, வர்க்கமுரண் என்று அனைத்தையும் பேசிய படம் அன்று விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.
இந்தப் படத்தில் நடித்த போது ரகுவரன் அமலாவை காதலிக்க ஆரம்பித்தார். ஒருதலைக் காதல்தான். தனது காதலை அவர் அமலாவிடம் கூறிய போது அமலா அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. காதல் தோல்வி ரகுவரை மனஅழுத்தத்தில் தள்ளியது. இதனை அவரே பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
கொடி பறக்குது, வெற்றி விழா, மாப்பிள்ளை என முக்கியமான படங்களில் நடித்தவர் 1991 இல் கற்பூர முல்லைக்குப் பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டார். அதற்கு முன் 1989 இல் சிவா தெலுங்குப் படத்தில் நடிக்கைகையில் நாகார்ஜுனுடன் அமலாவுக்கு நட்பு ஏற்பட்டது. இந்தப் படத்தில் நாகார்ஜுனா, அமலா ஜோடியாகவும், ரகுவரன் வில்லனாகவும் நடித்திருந்தனர்.
1991ல் நிர்மயம் என்ற படத்தில் நடிக்கும் போது நாகர்ஜுனாவுடன் அமலாவுக்க காதல் ஏற்பட்டது. 1993ல் திருமணம் செய்த அமலா நடிப்பதையே நிறுத்தினார்.
பின்னர் 2012ஆம் ஆண்டு LIFE IS BEAUTIFUL என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். பின்னர் தொடர்ந்து ஒன்றிரண்டு இந்தி படங்கள், மலையாள படங்களில் நடித்த அவர் தமிழில் கணம் படம் கடந்த 2022ல் வெளியானது.
ரகுவரன் ஒருதலையாக காதலித்த பின், அமலா தமிழ் சினிமாவை விட்டு விலகி தெலுங்கு பக்கம் போய் அங்கேயே செட்டில் ஆனது அவரது ரசிகர்களிடையே அன்றைய காலங்களில் வருத்தத்தை ஏற்படுத்தியது.
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
கலவையான விமர்சனம் சீயான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமின்பூரில் உள்ள உள்ளூர் ராகவேந்திரா நகர் காலனியில் வசிக்கும் சென்னைய்யா ( 55 )…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் புனித சேவியர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில்…
புகார் மீது புகார்.. சமீப காலமாகவே வடிவேலுவுடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் அவரை குறித்து பல புகார்களை அடுக்கி…
This website uses cookies.