உயிருக்கு போராடிய பிரபல நடிகர்… படப்பிடிப்பின் போது பயங்கர விபத்து : ஓடி வந்து காப்பாற்றிய உதவி ஒளிப்பதிவாளர்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 January 2023, 2:32 pm

படப்பிடிப்பின் போது சண்டைக்காட்சியில் தத்ரூபமாக நடித்த பிரபல நடிகரை உதவி ஒளிப்பதிவாளர் ஓடி வந்து காப்பாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஸ்கூட்டர் போட் ஓட்டும் ஸ்டண்ட் காட்சி ஒன்றில் ரிக்ஸ் எடுத்து நடித்தாராம் விஜய் ஆண்டனி. இந்த சமயத்தில் தான் விஜய் ஆண்டனிக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஸ்கூட்டர் போட்டில் இருந்து தவறி தண்ணீரில் விழுந்துள்ளார். விஜய் ஆண்டனிக்கு நீச்சல் தெரியாத காரணத்தினால் அவர் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளார்.

தண்ணீரில் இருந்து வெளியே வந்த விஜய் ஆண்டனி மூச்சு விடவே கஷ்ப்பட்டாராம். இதன்பின் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று ICUவில் அனுமதித்துள்ளனர்.

முகத்தில் காயம் ஏற்பட்டுள்ள விஜய் ஆண்டனி தற்போது சிகிச்சைக்கு பின் நன்றாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 898

    0

    0