நடிகையை காதலித்து தாலி கட்டாமல் ரகசிய வாழ்க்கை நடத்திய பிரபல நடிகர் : யார் தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2023, 2:31 pm

சினிமாவை பொறுத்தவரை உடன் நடிப்பவர்கள் காதலில் விழுவது, திருமணம் செய்வது, திருமணம் செய்யாமலே வாழ்கை வாழுவது என்பது வாடிக்கையாக மாறிவிட்டது.

அப்படி இணைந்த ஜோடிதான் இன்று வரை 29 வருடங்களாக பிரியாமல் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வேறு யாருமில்லை, உமா – ரியாஸ்கான் ஜோடிதான்.

ரியாஸ்கான் கிடைக்கும் வேடத்தில் படங்களில் தலைகாட்டி வந்தார். இவர் இஸ்லாமியர், கேரளாவில் பிறந்தவர். அதே போல இசையமைப்பாளர் காமேஸ் மற்றும் கமலா காமேஷ்க்கு பிறந்தவர்தான் உமா.

இவரும் சினிமாவில் கிடைக்கும் வாய்ப்பை நன்கு பயன்படுத்துபவர். இருவரும் சீரியல்களில் தற்போது பிஸியாக நடித்து கொண்டிருக்கினறனர்.

ரியாஸ் கான் தன் வாழ்க்கையில் எத்தனையோ படத்தில் நடித்து இருந்தாலுமே தற்போது எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் வாய்ப்பு கிடைக்காமல் ஹிந்தி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அவர் இன்ஷேப் ஹெல்த் & ஃபிட்னஸ் எனப்படும் சென்னையை தளமாகக் கொண்ட ஃபிட்னஸ் ஸ்டுடியோவின் பிராண்ட் அம்பாசிடராகவும் உள்ளார். மேலும், நடிகர் ரியாஸ் கான் தீவிர பாடிபில்டர் ஆவார். அவர் தனது உடற்கல்வியில் உன்னிப்பாக இருக்கிறார். ரியாஸ் கான் மகன் இப்போது தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டார். நடிகை உமாவுக்கு திருமணமாகி சுமார் 29 வருடங்கள் ஆகிறது. தற்போது வரை இருவரும் ஒன்றாகத் தான் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களது திருமணத்துக்கு பெற்றோர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், இருவரும் திருமணமாகி கொல்லத்தில் தங்கியுள்ளனர்.

மேலும், நடிகர் ரியாஸ் முஸ்லிம் ஆனால் நடிகை உமா இந்து ஆகியோர் தங்கள் வீட்டிற்கு எதிராக புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் 29 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் தற்போது நடிகை உமாவுக்கு ரியாஸ் கான் தாலி கட்டுவதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 936

    16

    6