ரஜினியை தரைகுறைவாக திட்டிய பிரபல நடிகை – ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம்!
Author: Shree23 April 2023, 10:46 am
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடுத்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.
பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய ரஜினிகாந்த் அதன் பின்னர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். ஆரம்பத்தில் பெரும்பாலும் வில்லன் ரோல்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் பின்னர் அதிரடி ஹீரோவாக அவதாரமெடுத்து சூப்பர் ஸ்டார், தலைவர் என ரசிகர்களால் பட்டம் சூட்டப்பட்டார். தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ரஜினியை பிரபல நடிகை வடிவுக்கரசி தரைகுறைவாக திட்டி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பிளாஷ்பேக் சம்பவம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆம், 1997 ஆம் ஆண்டு .சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் அருணாச்சலம். இப்படத்தில் கிழவி வில்லியாக பிரபல நடிகை வடிவுக்கரசி ரஜினியை “அனாத பயலே” என்றெலாம் தரைகுறைவாக திட்டி வசனம் பேசி நடித்திருப்பார். வரத்தை நடிப்பை பார்த்து மிரண்டுபோன ரஜினி கண்ணத்தில் முத்தம் கொடுத்து பார்ட்டியிடுத்தலும் அவரது ரசிகர்கள் வடிவுகரிசியை உண்மையிலே வில்லியாகவே பார்த்தனர்.
அப்படித்தான் அந்த வெளியான சமயத்தில் வடிவுக்கரசி ரயிலில் பயணம் செய்தபோது ரசிகர் ஒருவர் ஓடு வந்து ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை முயற்சி செய்து மிரட்டியுள்ளார். வடிவுக்கரசி ரஜினியை அப்படி பேசாதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையேல் ரயிலில் இருந்து இறக்கிவிடுங்கள் என ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். பின்னர் என்ன செய்வதென்றே தெரியாமல் பயணிகள் யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக நான் படத்தில் அப்படி பேசியது தவறுதான் என மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் அவர் அருணாச்சலம் படம் வெளியான போது 30 நாட்கள் தலைமறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.