படம் தோல்வி.. சம்பளமே வேண்டாம் என கூறிய பிரபல நடிகை : எவ்ளோ பெரிய மனசு.. ஆச்சரியத்தில் இயக்குநர்!!
Author: Udayachandran RadhaKrishnan4 March 2023, 4:59 pm
படம் வெளியாகி தோல்வியடைந்ததால் சம்பளமே வேண்டாம் என பிரபல நடிகை கூறியுள்ளது இயக்குநரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை சம்யுக்தா சமீபத்தில் தனுஷ் ஜோடியாக வாத்தி படத்தில் நடித்து பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்திருக்கிறார். அவர் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் மேனன் என்ற ஜாதி அடையாளத்தை நீக்குவதாகவும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாத்தி படத்தில் அவரது நடிப்புக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து இருக்கும் நிலையில் அடுத்து அவருக்கு மேலும் தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்யுக்தா இதற்கு முன்பு Edakkad Battalion 06 என்ற மலையாள படத்தில் நடித்தாராம். அதன் தயாரிப்பாளர் சாண்ட்ரா தாமஸ் தற்போது அளித்திருக்கும் பேட்டி வைரல் ஆகி இருக்கிறது.
“Edakkad Battalion படத்திற்காக 65% சம்பளம் மட்டுமே சம்யுக்தாவுக்கு கொடுத்திருந்தேன். ஆனால் படம் வெளியாகி தோல்வி அடைந்தது. இரண்டு நாட்கள் கழித்து சம்யுக்தா ஒரு மெசேஜ் அனுப்பினார். மீத சம்பளத்தை நீங்கள் எனக்கு கொடுக்க வேண்டாம், நீங்கள் கொடுத்தாலும் நான் வாங்கமாட்டேன். அடுத்து ஒரு நல்ல படத்தில் பணியாற்றலாம் என கூறிஇருந்தார்.
“முழு சம்பளத்தை கொடுத்தால் தான் டப்பிங், ப்ரோமோஷனுக்கு வருவேன் என சொல்லும் நடிகர்களுக்கு சம்யுக்தா மேனன் ஒரு சிறந்த textbook போன்றவர்” என சாண்ட்ரா தெரிவித்து உள்ளார்.