என் எதிரே ரெண்டு பாப்பா.. 2 நடிகையுடன் கமல் இருந்த அந்த போட்டோவை பகிர்ந்த பிரபல நடிகை.. !
Author: Rajesh27 May 2022, 1:11 pm
சென்னையில் 8வது பிகைன்ட் வுட்ஸ் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். பாலிவுட்டில் இருந்தும் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். நடிகை சன்னி லியோன் மேடையில் குத்தாட்டம் போட்டது யாருமே எதிர்பார்க்காத நிகழ்வுகளில் ஒன்று.
இந்த நிலையில் இந்த ஆண்டிற்காக பெஸ்ட் சிங்கர் அவார்டு நடிகை ஆண்டிரியாவிற்கு வழங்கப்பட்டது. அப்போது விழாவிற்கு நடிகை ஆண்டிரியா ஃபேன்ஸி சேலையில் தகதகனு வந்து நின்றார். விருதை பெற்றுக் கொண்டதும் புஷ்பா பட பாடலான ‘ ஊ சொல்றியா மாமா’ என்ற பாடலை பாடி அசத்தினார்.
மேலும் அவர் தன் இன்ஸ்டா பக்கத்தில் விருதை பெற்றுக் கொண்ட புகைப்படத்தையும் 10 வருடத்திற்கு முன் வெளிவந்த விஸ்வரூபம் படத்தின் புகைப்படத்தையும் சேர்த்து பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் விஸ்வரூபம் படத்தின் விழாவின் போது இதே சேலையில் தான் 2013 ஆம் ஆண்டும் கலந்து கொண்டிருக்கிறார்.
சுமார் 10 வருடங்களுக்கு முன்பு கட்டிய சேலையில் மீண்டும் இந்த விருதை பெற்றுக் கொண்டேன் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கமல் பக்கத்துல ரெண்டு பாப்பா என கமெண்ட் செய்து வருகின்றனர்.