விஜயகாந்த்தை நம்பி கோடி கோடியாக அள்ளிக் கொடுத்த பிரபல நடிகை.. மொத்தமும் போச்சே என தெருக்கோடியில் தவிக்கும் அவலம்!

Author: Udayachandran RadhaKrishnan
29 December 2022, 2:31 pm

சினிமா உலகில் 80 மட்டும் 90 காலகட்டத்தில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்கள் இன்று வாய்ப்பு கிடைக்காமல் ஒரு சிலர் சினிமாவில் இருந்து விலகி சின்னத்திர பக்கம் சென்றுள்ளார்கள்.

ஒரு சிலர் அம்மா மற்றும் அக்கா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் ஒரு காலகட்டத்தில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ள நடிகைதான் பானுப்பிரியா.

இவரைப் பற்றியான சில தகவல் சமீபத்தில் வெளியாகி உள்ளது. கடந்த, 1990களில் ரஜினி, விஜயகாந்த், கார்த்திக், கமல் போன்ற நடிககைளுடன் இணைந்து நடித்து ள்ளார்.

இவர் சுமார் 100க்கும் மேற்பட்ட திரைப்பட ங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் தன்னுடைய 17 வயதில் சினிமாவுக்கு நடிக்க வந்துள்ளார்.

அந்த வகையில் 1983ம் ஆண்டு முதன்முறையாக தமிழ் திரைப்படமான மெல்லப் பேசுங்கள் என்ற திரைப்படம் மூலம் நடித்தார் பானுப்பிரியா.

பின்னர் தன்னுடைய கண்களால் புரட்சிகளை வெளிப்படுத்தும் சிறந்த நடிகையாக வலம் வந்தார். இவர் நடித்த சைதை தமிழரசி கதாபாத்திரம் மறக்கவே முடியாது. நடனத்திலும் சிறந்து விளங்கினார்.

1998 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2005ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார். கணவரை விவாகரத்து செய்த உடன் சென்னையில் வசித்து வருகிறார்.

அப்படித்தான், தான் மீண்டும் சினிமாவில் ரி என்ட்ரி கொடுக்க ஆசைப்பட்ட பானுப்பிரியா, விஜயகாந்த்தை வைத்து ஒரு படத்தை தயாரிக்க முன்வந்தார்.

இதற்காக கோடிக்கணக்கில் பணம் போட்டு தயாரித்துள்ளார். ஆனால் அந்த படம் சில காரணங்களால் வெளியாகமல் இருந்தது. இதனால் நடிகை பானுப்பிரியா பெரும் நஷ்டத்தை சந்தித்து தனது சொத்துக்களை இழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1386

    16

    7